தமிழ்க்காப்புக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்க்காப்புக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 நவம்பர், 2026

இலக்குவனார் திருக்குறள் விருதுகள் அறிவிப்பு

இலக்குவனார் திருக்குறள் விருதுகள் அறிவிப்பு, 2026

 

உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்தநாள் பெருமங்கலத்தையும் தமிழ்க்காப்புக்கழகம், மாநிலத்தமிழ்ச்சங்கம், திருவள்ளுவர் மா மன்றம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து கொண்டாடுகின்றன. இவ்விழா வரும் ஐப்பசி 29, 2057 / 15.11.2026 ஞாயிறு காலை அன்று கொண்டாடப்பட உள்ளது. விழா சென்னை க.க.நகரில் உள்ள  புலப்பாட்டுப் புத்தக அரண்மனை/Discovery book palace மாடியில் அமைந்துள்ள கலைக்கூடத்தில் நடைபெறும். இலக்குவனார் திருக்குறள் சிறப்பு விருதுகள் ஐவருக்கு, இலக்குவனார் திருக்குறள் விருதுகள் முப்பத்தறுவருக்கு, இலக்குவனார் தமிழ்க்காப்புத் தொண்டர் விருதுகள் ஒன்பதின்மருக்கு இலக்குவனார் குறட்பணித் துணைஞர் விருதுகள் அறுவருக்கு என மொத்தம் ஐம்பத்தாறு திருக்குறள் செயன்மையர்களுக்கு தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் இலக்குவனார் திருக்குறள் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

1. சான்றோர்(செவிலியர்) வீ.ஞா.சந்தோசம்

இலக்குவனார் திருக்குறள் அருளாளர்

 2. ஆய்வுலக வழிகாட்டி முனைவர் ப.மருதநாயகம்

இலக்குவனார் திருக்குறள் அருவினைஞர்

3. தனித்தமிழறிஞர் முனைவர்  பா.வளனரசு

இலக்குவனார் திருக்குறள் அருவினைஞர்

4. செயற்பாட்டு அறிஞர்

பேராசிரியர் முனைவர் சான் சாமுவேல்

இலக்குவனார் திருக்குறள் அருவினைஞர்

5. மருத்துவமாமணி புதுமை செயப்பிரகாசம்

இலக்குவனார் திருக்குறள் அருட் கொடைஞர்

 

இலக்குவனார்  திருக்குறள் விருதுகள் பெறுவோர்:

 

பேராசிரியர் பசீர் அகமது, கவிக்கடல் ஆ. விசுவநாதன் (எ)  தமிழ்க் குழவி ,சிந்தனைக்கவிஞர். பறம்பு நடராசன், செயலியர் சுரேசு சம்பந்தன், செயலியர் செயபாலன், பேராசிரியர் ப. இராம்கோபால், பாவலர்  கொழுமம்ஆதி, ஆய்வாளர் வே.மு. பொதியவெற்பன், திறனாய்வறிஞர் முகிலை இராசபாண்டியன், செம்பியன் நிலவழகன், சேயோன், பேராசிரியர் வெ.அரங்கராசன், தமிழ்வானம் சுரேசு, குறட் திரு துரை.தனபாலன், அ. இல.ஏகலைவன், முனைவர் அ.கோவிந்தராசு, குறட் திரு இருளப்பன் அருணாச்சலம், கவிஞர் இல. சாந்தா, கவிஞர் த நளினி சண்முகம், க. செயபாலன், இணையத் தொண்டர் மு.சத்தியப்பிரியா,, கவிஞர் த நளினி சண்முகம், கவிஞர் இல. சாந்தா, குறட் திரு இருளப்பன் அருணாச்சலம், முனைவர் அ.கோவிந்தராசு, எழுத்தாளர் அ. இல.ஏகலைவன், குறட் திரு துரை.தனபாலன், தமிழ்வானம் சுரேசு, புலவர் உ தேவதாசு. முனைவர் வே.தீனதயாளி, முனைவர் இரா.குணசீலன் , முனைவர் ஆனந்தி வாசுதேவன், முனைவர் இரெ. குமரன், எழுத்தாளர் அர.கனகராசு, முனைவர் செ. இராசேசுவரி, முனைவர் நேத்திரா ஆனந்து, முனைவர் மு. சோதிலட்சுமி, முனைவர் வெ. விசயலட்சுமி, முனைவர். இரா. பாண்டீசுவரி, குமரி சு.நீலகண்டன், கவிஞர் நா. சூரிய பிரேமா, முனைவர் தங்க பழனிவேல் சுதந்திர பாரதி

இலக்குவனார் தமிழ்க் காப்புத் தொண்டர் விருதுகள் – 9

1. குறட் திரு சோலை ஆ.மதிவாணன்

2. முனைவர் வி. பொ.ப.தமிழ்ப்பாவை

3. முனைவர் புத்தேரி தானப்பன்

4. குறட் திரு மகிழன்

5. முனைவர் மா.போ.ஆனந்தி

6. கவிஞர் நெல்லை சோமசுந்தரி

7. குறட் திரு வேல்ராசு

8. குறட் திரு தமிழ்க்காதலன் என்ற கசுமீர் இராசு

9. எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசம்

இலக்குவனார் குறட்பணித் துணைஞர்  விருதுகள்

  குறட் திரு வடிவேல்

        குறட் திரு அர்ச்சன்

        குறட் திரு  மாயக்கிருட்டிணன்

        குறட் திரு செல்வகுமார் துரைப்பாண்டியன்

        குறட் திரு செந்தில்வேல் முருகன்

       குறட் திரு தினேசு வரதராசன்

விழா நாளன்று விருதாளர்கள் காலை 9.00 மணிக்கே வந்திருந்து பதிவு செய்து கொள்ளவும் வர இயலாதவர்கள் கொடுக்கப்பட வேண்டியவர்கள் பெயர்களைத் தெரிவிக்கவும் வேண்டப்படுகின்றனர்.


விழா நாளன்று விருதாளர்கள் காலை 9.00 மணிக்கே வந்திருந்து பதிவு செய்து கொள்ளவும் வர இயலாதவர்கள் கொடுக்கப்பட வேண்டியவர்கள் பெயர்களைத் தெரிவிக்கவும் வேண்டப்படுகின்றனர்

.இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்  

ஐப்பசி 23, 2057 / 09.11.2026

சனி, 11 ஏப்ரல், 2026

இணைய உரை 6+ தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி+11.04.26





வியாழன், 19 பிப்ரவரி, 2026

ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்

      19 February 2026      அகரமுதல



கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)                                                 

தமிழே விழி!                                 தமிழா விழி!

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்

ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம்

செவ்வாய், 20 ஜனவரி, 2026

இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு

      20 January 2026      அகரமுதல

ஃ


தமிழ்க்காப்புக் கழகம்,  வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சங்கத்தமிழ் விருதுகளுக்கான தகுதியானவர்களைத் தெரிவு செய்துள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:-

அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது

  1. ஆ.) இலக்குவனார் சங்கத்தமிழொளி விருது
  2. பேரா.முனைவர் ப.மருதநாயகம்
  3. முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
  4. முனைவர் பொ.நா.கமலா
  5. முனைவர் வைதேகி எருபருட்டு(Vaidehi Herbert)
  6. முனைவர் முகிலை இராசபாண்டியன்
  7. முனைவர் ப.பாண்டியராசன்
  8. முனைவர் செங்கைப் பொதுவன்
  9. முனைவர் செ.இராசேசுவரி
  10. புலவர் ச.ந.இளங்குமரன்

இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது

  1. முனைவர் ஏ. கோதண்டராமன்
  2. நெல்லை சோமசுந்தரி
  3. முனைவர் கு.சக்திலீலா

ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது

  1. புலவர். துரை. முத்துக்கிருட்டினன்
  2. முனைவர் தேமொழி
  3. முனைவர். செயந்தி நாகராசன்
  4. இலட்சுமி குமரேசன்
  5. கவிஞர்.ச.சங்கீதா

உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது

  1. முனைவர்.பயசு  அகமது

ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது

60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை பராசக்தி என்னும் பெயரில் அளித்தமைக்காக

  1. இயக்குநர் திருவாட்டி சுதா
  2. கதை உரையாடல் ஆசிரியர் ந.அர்ச்சுன்

எ.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது

  • முனைவர் அ.இராமசாமி – என்று முடியும் இந்த மொழிப் போர், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு (இரு பாகங்கள்). Struggle Against Hindi Imperialism 1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு – நூல்களுக்காக
  • எழுத்தாளர் நிவேதிதா (உ)லூயிசு – ‘1938 முதல் மொழிப் போரில் பெண்கள்’ நூலுக்காக

ஏ,) இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருது

  • குங்குமம் சுந்தரராசன் – மொழிப்போர் ஆவணப்படங்களுக்காக
  • மூத்த இதழாளர் மணா – ‘உயிருக்குநேர் ஆவணப்பட எழுத்திற்கும் இயக்கத்திற்கும்

இவ்விருதுகள் வரும் தை 11. 2057  ஞாயிறு  மாலை 5.30 மணிக்கு வழங்கப் பெறும்.

நிகழ்விடம் : தாழ் தளம்,  தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8

இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்

தை 06, 2057 / 20.01.2026


வியாழன், 3 ஜூலை, 2025

தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் – தமிழ்த் தாய்மையும் கன்னடச் சேய்மையும் – இணைய அரங்கம் : 06.07.2025

 




எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.  

(திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௫௰௫ – 355)

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

பொதுச் செயலர், மார்க்குசியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

பாவலரேறு பைந்தமிழ்க் கல்விக்கழகம்

மேனாள் உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்

ஞாயிறு, 8 ஜூன், 2025

தமிழ்த்தாய்மையும் கன்னடச் சேய்மையும் இணைய அரங்கம்

 






அனைவருக்கும் வணக்கம்!

தமிழ் மொழியையும் அதன் கிளை மொழிகளையும் திராவிட மொழிகள் என்று சொல்லாமல் தமிழ்க்குடும்ப மொழிகள் என்று சொல்ல வேண்டும் என்பார் செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார்.

இவற்றுள் இந்தியத் துணைக் கண்டத்தில் தென் தமிழ்க்குடும்பப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வட தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன. தென்னாசியா அளவில் தமிழ்க்குடும்பத்தில் 86 மொழிகள் உள்ளன.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான உலக அறிஞர்கள் பலரும் “தமிழே உலக மொழிகளின் தாய்” என்று நிறுவியுள்ளனர். அவ்வாறெனில் உலகிலுள்ள எல்லா மொழிகளும் தமிழ்க்குடும்ப மொழிகள்தாம். அவற்றில் ஒரு பகுதி நெருங்கிய உறவு மொழிகளாகவும் பெரும்பகுதி உறவாக இருந்து விலகிய மொழிகளாகவும் உள்ளன.

எனினும் தென்தமிழ்நாட்டில் உள்ள தமிழ்க்குடும்ப மொழிகள் தமிழின் சேய் மொழிகளே என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், இச்சேய்மொழி பேசுவோர், தங்கள் மொழி தமிழின் சேய் என ஒத்துக்கொள்ள மறுக்கினறனர். தாய் அழகாக இல்லாவிட்டாலும் அறிவாக இல்லாவிட்டாலும் தாய், தாய்தான். ஆனால், வளமும் சீரும் சிறப்பும் உயர்தனிச் செம்மொழித் தன்மையும் உள்ள தமிழின் சேய்மொழி பேசுநர் தமிழின் மக்கள் எனச் சொல்வதை இழிவாகக் கருதுகின்றனர்.அதே நேரம் சமற்கிருத மொழியின் சேய் எனக் கூறுவதற்கு மகிழ்ச்சி அடைகின்றனர்.

 ஆனால், மக்கள் நீதி மையத் தலைவர் கமல் கன்னட மொழியினருடனான நெருக்கத்தைக் காட்டுவதற்காகக் கன்னடத்தின் தாய் தமிழ் என்றதற்குக் கன்னடர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலைத்துறையினர், அரசியல்துறையினர், நீதித்துறையினர் என அனைத்துத் தரப்பாரும் எதிர்க்கின்றனர். ஆராய்ச்சி முறையில் விடையிறுக்காமல் வெறுப்பு நோக்கில் கண்டிக்கின்றனர். இதற்குக் காரணம், தமிழின் தாய்மை குறித்த பாடங்களை இந்திய மொழிகளில் வைக்காமைதான்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழிசை போன்றவர்களே அரசியலுக்காக இவ்வாறு தெரிவிக்கும் பொழுது உண்மையை உரைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எனவே,

என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இணையவழிக் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

கட்டுரைகளைச் சீருரு/ஒருங்குகுறி வடிவில் அனுப்புதல் நன்று.

பதிவு விவரத்தையும் கட்டுரையையும்

அனுப்ப வேண்டிய மின் வரி : thirunool50@gmail.com

கட்டுரைகள் பக்க வரையறை யில்லை. ஆனால், பேச்சை 15 நிமையத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

பின் வரும் தலைப்பு ஒன்றில் அல்லது மையத் தலைப்புடன் பொருந்தக் கூடிய தலைப்பு ஒன்றில் கட்டுரை அனுப்ப வேண்டுகிறோம்.

தமிழ்த்தாய் – கன்னடச் சேய் உறவுகள்

பெயர்ச் சொற்களில்

வினைச் சொற்களில்

உறவுப் பெயர்களில்

எண்ணுப் பெயர்களில்

இடப் பெயர்களில்

பழமொழிகளில்

மரபுத்தொடர்களில்

இலக்கியங்களில்

மொழியியல் நோக்கில்

வரலாற்று நோக்கில்

கலை பண்பாட்டு நோக்கில்

கட்டுரைகள் பக்க வரையறையில்லை. ஆனால், பேச்சை 15 நிமையத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

கட்டுரைகளை, செ.த.ம.நி. மேனாள் பதிவாளர் முனைவர் மு, முத்துவேலு தலைமையிலான குழு தேர்ந்தெடுக்கும்.

பதிவுக் கட்டணம் எதுவுமில்லை. தமிழாய்வாளர்கள் யாவரும் பங்கேற்கலாம்.

ஆதலின், அருந்தமிழ் ஆய்வாளர்களை உடன் பதிந்து கொள்ள வேண்டுகிறோம்.

புவி உருண்டையானது, புவி சுற்றுகிறது முதலான இயற்கை உண்மைகளைத் தெரிவித்த அறிவியலாளர்கள் பழமைவாதிகளாலும் மதவாதிகளாலும் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். தமிழ்மொழியின் தாய்மை நிலையையும் மூத்த நிலையையும் தெரிவிப்பவர்களும் எதிர்ப்புகளைச் சந்திக்கிறார்கள். எனவே, அவர்களுக்குப் புரியும் வகையில் உண்மையை உரைக்கும் வண்ணம் கட்டுரைகளை அனுப்ப வேண்டுகிறோம்.