அகரமுதல
கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை’ சிறுவர் குறும்புதினம் வெளியீட்டு விழா திண்டுக்கல் பிச்சாண்டி அரங்கில் புரட்டாசி 12, 2050 / 29.09.2019 நடைபெற்றது.
திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகத்தின் 15-ஆம் ஆண்டு விழா,
இலக்கியக் கூடல் 50-ஆவது நிகழ்வு, நூல்கள் வெளியீட்டு விழா என
முப்பெரு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்குக் கலை ஆய்வாளர் இந்திரன் தலைமையேற்றார். வெற்றிமொழி
வெளியீட்டகப் பொறுப்பாளர் விண்ணரசி அனைவரையும் வரவேற்றார்.
கவிஞரும் ஓவியருமான திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் முன்னிலை வகித்தார்.
கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை’
சிறுவர் குறும்புதினத்தைக் கலை ஆய்வாளர் இந்திரன் வெளியிட, கவிஞர்
இரா.தங்கப்பாண்டியன் பெற்றுக்கொண்டார்.
விழாவில், எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, மா.கமலவேலன், ஆங்கரை பைரவி,
கவிஞர்கள் யவனிகா சிரீராம், அமிர்தம் சூர்யா, இரா.எட்வின், பொன்.குமார் முதலான
ஏராளமானோர் கலந்துகொண்டனர். நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசுக்கு நினைவுப்
பரிசும் பொன்னாடையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
நிறைவாக, வெற்றிமொழி வெளியீட்டகத்தின் நிறுவனர் இரா.தமிழ்த்தாசன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக