தொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை நிதிசேர் தொடர்பாக
மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ
Fundraising for University of Toronto Tamil Chair
Grand Tamil Knowledge Competition
தொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக நிதி சேகரிக்கும் நோக்கிலும் மாணவர்களுக்குத் தமிழ், தமிழர் தொடர்பான அறிவை ஊட்டும் நோக்கோடும் மாணவர்களுக்கான மாபெரும் தமிழறிவுப் போட்டி நடைபெறவுள்ளது.
நிலைகள்
கீழ்ப்பிரிவு 12 வயது வரை 80 வினாக்கள்
மேற்பிரிவு 18 வயது வரை 120 வினாக்கள்
இப்போட்டிகளுக்கான வினாக்களும் விடைகளும் இணையத் தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
காலம் / இடம்
ஆவணி 07 – 08, 2050 * 24-25.08.2019
தமிழர் விழாவில் அமைக்கப்பட்டிருக்கும்
தமிழ் இருக்கைக்கான அரங்கு.
பதிவு விவரம்
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான முன் பதிவைக் கனடியத் தமிழர் பேரவை அலுவலகத்தில் செய்வது வரவேற்கப்படுகின்றது.
போட்டி நடைபெறும் நாட்களிலும் பதிவு செய்யக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
போட்டியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் ஒருவருக்கு 10 தாலர் ஆகும்.
போட்டி வடிவம்
கணிணியில் குறித்த கால எல்லை வரை வினாக்கள் 4 விடைகளோடு தோன்றிக்கொண்டிருக்கும். வேகமாகவும் பொருத்தமாகவும் விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
வெற்றியாளர்
குறித்த நேரத்துக்குள் மிகக் கூடிய மதிப்பெண் பெறுபவர், அதாவது கூடிய வினாக்களுக்கு சரியான விடையைச் சொல்பவர் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார்.
ஒன்றுக்கு மேற்பட்டோர் சம மதிப்பெண் பெற்றிருந்தால், குறைந்தளவு வினாக்களில் கூடிய மதிப்பெண் பெற்றவர் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார்
இதன்பின்பும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக இருக்குமிடத்து பரிசுகள் பகிர்ந்தளிக்கப்படும்.
பரிசு விவரம்
இரு நிலையிலும் முதல் மூன்று வெற்றியாளருக்கு பதங்கமும், பரிசும் வழங்கப்படும்
முதற்பரிசு 250 தாலர்
இரண்டாம் பரிசு 150 தாலர்
மூன்றாம் பரிசு 100 தாலர்
போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
சான்றிதழ்கள், பதக்கங்கள், பரிசுகள் தொரண்டோ தமிழ் இருக்கைகான நிதிசேர் நீள்நடை நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக