முனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்!
எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், தமிழ்த் தேனீ பேராசிரியர் முனைவர் இரா.மோகன் இன்று(வைகாசி 29,2050 / 12.06.2019) காலை மாரடைப்பால் மரணமுற்றார். நேற்று நெஞ்சகநோய்ப் பாதிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இன்று திரும்பவில்லை.
ஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாகவும் நூல்களுக்கு அணிந்துரை, திறனாய்வு, மதிப்புரை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துபவராகவும் நகைச்சுவை மன்றத்தில் பங்கேற்று நகைச்சுவை வாணர்களின் ஊக்குநராகவும் புன்னகையுடனும் பண்புடனும் அனைவருடனும் பழகும் தோழராகவும் சிறந்து விளங்கிய முனைவர் இரா.மோகன் தமிலுகில் இருந்து பிரியா விடை பெற்றார்.
செளராட்டிரக் குமுகத்தில் தலைசிறந்த தமிழறிஞராகவும் தகைமையாளராகவும் புகழுடன் விளங்கிய முனைவர் இரா.மோகன் புகழடல் எய்தினார்.
தமிழுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு அவர் அகன்று விட்டார்,
ஒருசாலை மாணாக்கராகத் கல்லூரிக் காலத்திலிருந்து தோழமை பூண்டிருந்த இனிய நண்பர் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். உற்றார் உறவினர் துன்பத்தில் அ்கரமுதல மின்னிதழும் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் பங்கேற்கின்றன.
நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நிகழ உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக