2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் – யாழ்பாவாணன் வெளியீட்டகம்
படத்திற்குக் கவிதை எழுதுங்கள்
படத்தைப் பார்த்தீர்களா? நம்ம பிள்ளைகள் பூங்காக்கள் போய் காதலில் மூழ்கித் தங்களை மறந்து தவறு செய்த பின், செய்த தவற்றின் பரிசாகக் கிடைத்த குழந்தைகளைத் தெருவில் போட்டுச் செல்கின்றனர். இந்நிலை மேற்கத்தியப் பண்பாட்டில் இருந்து தமிழ் பண்பாட்டிற்குத் தொற்றிய நஞ்சு தான். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள் ஆகிய நீங்கள், உங்கள் பாத்திறம் /கவியாற்றல் மூலம் நல்ல தீர்வினை முன்வையுங்கள் பார்ப்போம்.
தலைப்பு: இது தான் காதலா?
பரிசு: 500 இந்திய உரூபாய் பெறுமதியான பொத்தகங்கள்
வசதி: மின்நூலாக்கி வெளியிடுவோம்
கட்டுப்பாடு: 10-20 வரிகளில் மரபுக் கவிதை / புதுக் கவிதை. பின்னூட்டங்களில் வரும் கவிதைகள் ஏற்கப்படமாட்டா.
மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject): ‘2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்‘என்றவாறு இருக்க வேண்டும்.
கவிதைகள் அனுப்புவோர்: கடவுச்சிட்டு அளவுப் படம், பெயர், முகவரி, முகநூல்/வலைப்பக்க முகவரி, நடைபேசி எண் ஆகியன இணைத்து அனுப்பவேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.
முடிவு நாள்: தை 28, 2049 / 10/02/2018
வெளியிடுவோர்: யாழ்பாவாணன் வெளியீட்டகம்
மின்நூல் வெளியீடு: மாசி 24, 2049 / 08/03/2018
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக