நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால்

உலக மனித உரிமை நாளில் நடாத்தப்பட்ட

‘தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு’

இம் மாநாடு வெம்பிளியில்(Wembley International Hotel, Empire Way, Wembley, Middlesex, HA9 0NH)), கார்த்திகை 24,2048 / திசம்பர்  10, 2017, காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடை பெற்றது.
தலை சிறந்த அறிவாளிகளை உள்ளடக்கி எம் இனத்துக்கு நடந்த இனப்படுகொலையை இவ்உலகுக்கு எடுத்துக்காட்டவும், காணி பறிப்பு,  கமுக்கச் சித்திரைவதை முகாம், அரசியல் கைதிகள் விவகாரம் என்று பல செய்திகளை உள்ளடக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கும் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பெராசிரியர் சொர்னராசு ஏன் இந்த மனித உரிமை நாளை நாங்கள் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும், எம் இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கான நீதியை எப்படி வென்றெடுத்தல், எப்படி இலங்கையை உலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்பன பற்றி எடுத்துக் கூறினார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் உருத்திரக்குமார் எப்படியான வேலைப்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்து வருகிறது என்பதை கச்சிதமாக எடுத்துரைத்தார், முதன்மையாகத் தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைக்கு எதிராகப் பாவிக்கப்படும் 6 ஆம் திருத்தச் சட்டத்தை இலங்கையில் இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்பதற்காக 1,705 சட்டத்தரனணிகளின் கையொப்பம் இட்ட பத்திரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு, மனித உரிமை  நாளாகிய  கார்த்திகை 24,2048 / திசம்பர்  10, 2017அன்று அனுப்பியதாகத் தெரிவித்தார் அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல இன்றியமையாச் செயற்பாட்டுகளையும் எடுத்துரைத்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிஉறவு அமைச்சர் திரு. மாணிக்கவாசகர்,  இனப்படுகொலைக்கான தடுப்ப-உசாவல் பன்னாட்டு மையத்தின் இயக்குநர்  [Director of International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG)]  செல்வி. அம்பிகை சீவரடணம் மற்றும் அங்கு கருத்துத் தெருவித்த தேசிய தமிழ் மன்னன், செல்வி அங்கயற்கண்ணி, திரு. இராசன் போன்றவர்கள் தாயகத்தில் எமது மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், தமிழ் மக்கள் படும் இன்னல்கள்களை எடுத்துரைத்தார்கள்.
தமிழர்களின் தோழமை மையமான (Tamil Solidarity)இல் இருந்து திரு.சேனன் எவ்விதத்தில் எமது தாயக நிலங்கள் சூறையாடப்பட்டுகின்றன என்பதனையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு – குமுகாய  நலத்தின்  பகர  அமைச்சர் திரு. சொ. இயோகலிங்கம் எப்படியாக இலங்கை அரசாங்கம் உலக நாடுகளை ஏமாற்றித் தம்வசம் எடுக்கின்றனர் என்பதனையும் அதற்கு உலகெங்கம் பரந்து வாழும் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் எடுத்துக் கூறினார்.
இங்கு  சிறப்பாக வேற்று நாட்டவரும் வருகைதந்து தமக்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள்பற்றி விளக்கினார்கள் குறிப்பாக  அரசு இல்லா நாடு (Nation Without States) அமைப்பில் இருந்து  கிரகாம் வில்லியம்சு, தோரிசு இயோன்சு, தம்பனி (Clr. Graham Williams, Ms. Doris Jhones, Mr.Thambani) முதலான பலருடன் இலண்டன்வாழ் பொது மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
புத்தரின் பெயரால் (in வாந யேஅந டிக க்ஷரனனாய கடைஅ), எம்மக்களுக்கு நடந்த இனப்படுகொலையை சித்தரிக்கும் திரைப்படத்தை இணையத்தளத்தில் www.tecgtheater.comமுகவரியில் பார்க்கும்படியும் உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களைப்  பார்வையிட வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள – பேரளவிலான கொடூரங்கள்-இனஅழிப்புக் கெதிரான செயற்பாடுகளுக்கான அமைச்சர் திரு. மணிவண்ணன்  நடத்தியிருந்தார்,
அவருக்கு உறுதுணையாக மாவீரர் முன்னைநாள் போராளிகள் குடும்ப நலம் பேணல் அமைச்சின் ஜக்கிய  அரசாங்கத்தின் பார்பாளர் திரு. நிமலன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு –  மன்பதை நலத்தின்  பகர அமைச்சர் திரு. இயோகலிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் திரு.குசியந்தன், செல்வி.சோபனா, திரு.சிவகாந்தன் வழங்கியிருந்தனர்.
 உறுதிமொழி ஏற்பிற்குப்பின் தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத்  தாயகம்”  என முழங்கி இந்நிகழ்வு முடிவு பெற்றது.