வியாழன், 20 ஜூலை, 2017

வேண்டுகோள் கூட்டம் நன்றியுடன் ஒத்திவைக்கப்படுகின்றது.




செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்
தனித்தன்மையைக் காத்திடுக!
வேண்டுகோள் கூட்டம் நன்றியுடன் ஒத்திவைக்கப்படுகின்றது.


 செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்காமல் தனித்தன்மையைக் காத்திட  வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதற்கெனத் தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சார்பில் வரும்
ஆடி 07, 2048  ஞாயிறு   சூலை 23, 2017 காலை 10.00 மணி க்கு

  சென்னை எழும்பூரில்(தே.ப.கழக(இக்சா) மையம், பாந்தியன் சாலை(அருங்காட்சியகம் எதிர்ப்புறம்),    அனைத்து இந்தியத்தமிழ்அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.  ஆனால், நோக்கம் நிறைவேறிவருவதால் கூட்டத்தை அடுத்து வரும் சூழலுக்கேற்ப முடிவெடுக்கலாம் என ஒத்தி வைத்துள்ளோம்.

  மத்தியஅமைச்சர் பிரகாசு  சாவடேகர், ''செம்மொழி மையத்தைச் சென்னையிலிருந்து திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை. அந்த மையத்தின் தன்னாட்சி அதிகாரம் நிலைநிறுத்தப்படும்." என நேற்று மாநிலங்களவையில் அறிவித்துள்ளார்(தினமலர் 20.07.2017).
 நோக்கம் நிறைவேறியுள்ளபொழுது பாராட்டி நன்றி தெரிவிக்காமல் கூட்டம் நடத்தத் தேவையில்லை எனக் கருதுகிறோம்.

  மாண்புமிகு தமிழக முதல்வரும் ஆட்சிக்குழுத்தலைவர் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். முழுநேர இயக்குநரை அமர்த்த வேண்டும் என்ற  வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசிற்குத்  தெரிவுக் குழுவைப் பரிந்துரைத்துள்ளார்.   வரும் ஆடி 10, சூலை 26, 2017 அன்று ஆட்சிமன்றக் குழுவையும் கூட்ட உள்ளார். தமிழன்பர்களின் வேண்டுகோள்களை ஏற்று  முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துவரும் பொழுது இக்கூட்டம் இப்போதைக்குத் தேவையில்லை எனக் கருதுகிறோம்.
  இறுதியான முடிவிற்கேற்ப நம் போக்கினை அமைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதால், வரும் ஞாயிறன்று நடத்துவதாக இருந்த  கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  தமிழக அரசிற்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கின்றோம். 
  உலகத்தமிழர்களின் கனவு நிறைவேறும் வகையில் செம்மொழி நிறுவனத்தைச் சிறப்பாக நடத்த வேண்டுகிறோம்.
 கூட்டத்திற்கு ஒத்துழைத்த அனைத்து அமைப்புகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு- புதுச்சேரி தமிழ்அமைப்புகள்
முத்து செல்வன், செயல் தலைவர், அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை

 
1.       அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்

2.       அருணைத்தமிழ்ச்சங்கம்

3.       அனைத்திந்தியத்தமிழ்ச்சங்கப் பேரவை,

4.       இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை

5.       இராதே அறக்கட்டளை, புதுச்சேரி

6.       இலக்கிய வீதி

7.       இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம், புதுச்சேரி

8.       இலக்கியவளர்ச்சிக் கழகம், திருவாரூர்

9.       இலக்குஅமைப்பு

10.   இலக்குவனார் இலக்கிய இணையம்

11.   இலக்குவனார் இலக்கியப்பேரவை, அம்பத்தூர்

12.   இனிய நந்தவனம்

13.   ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை

14.   உலகச்சான்றோர் சங்கம்

15.   உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்

16.   உலகத் திருக்குறள் தகவல் மையம்,

17.   உலகத் திருக்குறள் மையம் 

18.   உலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை 

19.   உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை

20.   உலகத்தமிழ்க்கழகம்

21.   உலகத்தமிழ்க்கழகம், திருநெல்வேலி

22.   உலகத்தமிழ்க்கழகம், பெங்களூர்

23.   உலகத்திருக்குறள் மையம்

24.   உலகத்திருக்குறள் வாழ்வியல் நெறிச் சங்கம்

25.   உலகத்தொல்காப்பியமன்றம், திருச்சிராப்பள்ளி

26.   எழில் இலக்கியப் பேரவை 

27.   எழில் இலக்கியப் பேரவை, ஆவடி

28.   ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

29.   ஓசுர் தமிழ்ச்சங்கம்

30.   கரந்தைத் தமிழ்ச்சங்கம்,

31.   கருநாடகத்தமிழ்மொழி-சிறுபான்மையர் நலப்பேரவை, தங்கவயல்

32.   கரூர் தமிழ்ச்சங்கம்.

33.   கவிதை உறவு

34.   கவிதை வட்டம்

35.   கவிதைச்சிறகுகள்

36.   கவியரசர் முடியரசர் அவைக்களம், காரைக்குடி

37.   குடந்தைத் தமிழ்க்கழகம்

38.   குமரித்தமிழ்ச்சங்கம்

39.    குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம்(புதுச்சேரி)

40.   குறள்மலைச்சங்கம் 

41.   குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம்

42.    சங்கைத்தமிழ்ச்சங்கம்(சங்கராபுரம்)

43.   சூலூர் பாவேந்தர் பேரவை, சூலூர்

44.   செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம்

45.   செம்படுகை நன்னீரகம், புதுச்சேரி

46.   சென்னைத்துறைமுகத் தமிழ்ச்சங்கம்

47.   சேலம் தமிழ்ச்சங்கப்பேரவை

48.   தமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணை, திருச்சிராப்பள்ளி

49.   தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

50.   தமிழ் மன்றம், தென்காசி

51.   தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி

52.   தமிழ்க்களம், அரியலூர்

53.   தமிழ்க்காப்புக்கழகம்

54.   தமிழ்க்காப்புக்கழகம், திருவாரூர்

55.   தமிழ்த்தன்னுரிமை இயக்கம்

56.   தமிழ்ப்பேரவை, குளித்தலை

57.   தமிழ்மொழி அகாதமி

58.   தமிழ்வானம் சுரேசு

59.   தமிழகத்தமிழாசிரியர் கழகம்

60.   தமிழகப்புலவர் குழு

61.   தமிழர் பண்பாட்டுப்பேரவை, கரூர்

62.   தமிழியக்கம், கோயம்புத்தூர்

63.   தமிழினத் தொண்டியக்கம், புதுச்சேரி

64.   தலைநகர்த் தமிழ்ச்சங்கம்

65.   தனித் தமிழ்க் கழகம்

66.   தனித்தமிழ் இயக்கம், திருச்சிராப்பள்ளி

67.   தனித்தமிழியக்கம்,புதுச்சேரி

68.    தியாகதுருகம் தமிழ்ச்சங்கம்

69.   திருக்குறள் அரசுக் கழகம்

70.   திருக்குறள் பேரவை, கரூர் 

71.   திருக்குறள்அறிவியல் நிறுவம்

72.   திருப்பூர்த் தமிழ்ச்சங்கம்

73.   திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்

74.   திருவரங்கத் தமிழ்ச்சங்கம்

75.   திருவள்ளுவர் இலக்கிய மன்றம்

76.   திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை

77.   திருவள்ளுவர் ஞான மன்றம், செயங்கொண்டம்

78.   திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், வாங்கல்

79.   திருவள்ளுவர் மன்றம், புதுச்சேரி

80.   திருவள்ளுவர்  மன்றம், மதுரை

81.   திருவள்ளுவர் மன்றம், மறைமலை நகர்

82.   திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்

83.   திலகவதி மோகன்  இலக்கிய அறக்கட்டளை,

84.   தென்மொழி இயக்கம்

85.   தென்மொழி இயக்கம், குடந்தை

86.    நண்பர்கள் தோட்டம்

87.   நாகப்பட்டினம் தமிழ்ச்சங்கம்

88.   நாம் இலக்கியஅகம், பரமத்தி வேலூர்

89.   நூலக வாசகர் வட்டம், வந்தவாசி

90.   நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை,

91.   பகுத்தறிவாளர் மன்றம், கரூர்

92.   பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

93.   பாரதி கலை இலக்கிய மன்றம்

94.   பாரதி கலைக்கழகம்

95.   பாரதி நெல்லையப்பர் மன்றம், நங்கநல்லூர்

96.   பாரதிதாசன் பேரவை, கரூர்

97.   பாரதியார்  சங்கம்

98.   பாவலரேறு தமிழ்க்களம்

99.   பாவாணர் தமிழியக்கம், திருச்சிராப்பள்ளி

100.                        பாவாணர் பாசறை, முரம்பு

101.                        பாவாணர் மன்றம்,  கீரனூர்

102.                        பாவேந்தர் பாரதிதாசன் பேரவை,சின்னதாராபுரம்

103.                        பாவேந்தர் பேரவை, நாமக்கல்

104.                        புகழூர் தமிழ்ச்சங்கம், வேலாயுதபாளையம்

105.                        புதுச்சேரிக் கல்லூரித் தமிழாசிரியர் கழகம்

106.                        புதுவை புதிய தூரிகைகள்

107.                        புதுவைக்குயில் பாவேந்தர் இளைஞர் நற்பணி மன்றம், புதுச்சேரி

108.                        புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகம்

109.                        புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்

110.                        புதுவைத்தமிழ்ச்சங்கம்

111.                        புரட்சிக்கவிஞர் பேரவை, மதுரை

112.                        புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம்

113.                        பூந்தோட்டம் சிறார் சிந்தனைச் சிறகம், புதுச்சேரி

114.                        பூவுலகின் நண்பர்கள், புதுச்சேரி

115.                        பெங்களூர்த்தமிழ்ச்சங்கம்

116.                        பெருந்தலைவர் காமராசர் அறக்கட்டளை, திருச்சிராப்பள்ளி

117.                        பொள்ளாச்சி இலக்கியவட்டம்

118.                        மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

119.                        மக்கள் சிந்தனைப்  பேரவை, ஈரோடு

120.                        மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம், மதுரை

121.                        மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை 919840988361

122.                        மாணவர்  பொதுநலத்தொண்டியக்கம் 

123.                        மாணவர் பொதுநலத் தொண்டியக்கம், புதுச்சேரி

124.                        மாநிலத் தமிழ்ச்சங்கம்,  பாளையங்கோட்டை

125.                        முத்தமிழ் ஆய்வு மன்றம், மாக்கவி பாரதிநகர், சென்னை  

126.                        முத்தமிழ்ச்சங்கம், கடவூர்
127.   வந்தை வட்டக் கோட்டைத்தமிழ்ச்சங்கம்
 128.   வள்ளலார் பதிப்பகம்,போளூர் 
129. விடுதலை வீரர் தோழர் இரா.சீனுவாசன் தனலட்சுமி அறக்கட்டளை, புதுச்சேரி
 130. விழுப்புரம் தமிழ்ச்சங்கம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக