உதவி கேட்கும் முன்னாள் போராளி அன்பரசன் என்னும் கிருபாகரன் செல்லத்துரை
அன்புடையீர்
வணக்கம். அன்பரசன் என்னும் முன்னாள்
போராளி எழுதியுள்ள மடலைப் படிக்கவும். இவர் 2016 மார்ச்சு மாதம் சிறையில்
இருந்து வெளியே வந்தார்.
மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி
சென்ற கிழமை இவர் ஒரு நேர்ச்சியில்(வாகன விபத்தில்) சிக்கி யாழ்ப்பாணம்
பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மிதிவண்டியில் சென்றுகொண்டு
இருந்த இவரை எதிரே வந்த ஊர்தி மோதியுள்ளது.
சென்ற சனிக்கிழமை அவருக்கு அறுவை மருத்துவம் செய்யப்பட்டது.
எனக்குக் காலும் கையும் இருக்கிறது நான் உழைத்து முன்னேறுவேன் எனச் சொல்லிவந்த அவருக்கு இந்த நேர்ச்சி/விபத்து இடியாக இறங்கியுள்ளது.
கருணை உள்ளம் படைத்தவர்கள் அவருக்கு உதவ விரும்பினால் கீழ்க்குறிப்பிடும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பவும்.
தீபன் (S.Theepan)
க/எண்(Acc.NO): 116953916270
சம்பத்துவங்கி, கிளிநொச்சி
(sampath bank, kilinochchi)
– நக்கீரன்
புலம் பெயர்ந்து வாழும் எமது அன்பான உறவுகளுக்கு
புலத்தில் வாழும்
அன்பான உறவுகளே! அன்பரசன் ஆகிய நான் அறியத்தந்துதவுவது என்னவென்றால் நீண்ட
காலம் சிறைவாசம் துய்த்து வந்து குடும்ப வாழ்வில் இணைந்திருந்தேன். தற்போது
தற்செயலாக ஏற்பட்ட வீதி நேர்ச்சி(விபத்து) காரணமாக எனக்கு அறுவை
மருத்துவம்,(சத்திரசிகிச்சை), இரத்தம் இரண்டும் தேவைப்பட்டு வருவதால்
இதற்குப் பணம் தேவைப்படுகின்றது.
எனவே கருணை உள்ள
உள்ளங்கள் எமக்கு உதவிக் கரங்கள் நீட்டி உதவுங்கள் என்று உங்களை அன்போடும்,
பண்போடும் பாசத்தோடும் கேட்டுநிற்கின்றேன்.
நன்றி
இவ்வண்ணம்,
அன்பரசன்.
எண்(T.P NO:) 0769042824
இவ்வண்ணம்,
அன்பரசன்.
எண்(T.P NO:) 0769042824
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக