செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின்

தெய்வத்தமிழ் அறக்கட்டளையும்  எசுஆர்எம் பல்கலைக்கழகத்

தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும்,

தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு

(DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR)

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

  • 7-ஆம் ஆண்டு (2017-2018) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. சூன் 2017-இல் வகுப்புகள் தொடக்கம்
  • பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா முதலான வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு, நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் எசுஆர்எம் பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்
  • தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி. ஆண், பெண் இருபாலாரும் சேரலாம். வயது வரம்பில்லை.
  • விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15-06-2017
  • பட்டயப் படிப்பு  இருபருவங்கட்கும் சேர்த்துக் கட்டணம் உரூ.3500/- மட்டுமே
  ஏற்கெனவே  600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டயம் பெற்று செந்தமிழ் ஆகம அந்தணர்களாக இல்லச் சடங்குகளிலும், கோயில் பூசைகளிலும் களம் கண்டு வருகிறார்கள். கோயில்களில் தமிழே கொலுவிருக்க, வாழ்வியல் சடங்குகளில் வண்டமிழே வழிகாட்ட அரிதில் அமைந்துள்ள அருந்தமிழ் வாய்ப்பு! இப்பயிற்சியைப் பயன்கொள்ள விரையுங்கள்!
திருச்சி பகுதி மாணவர்களுக்கென இந்த ஆண்டு எசு.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் கணிபேசி (SKYPE)  மூலம் வகுப்புகள் தொடங்கப் படுகின்றன. திருச்சி மையத்தில் மாணவர்கள் படிக்க முன் வந்தால் மேற்படி விண்ணப்பத்தில்”T.A DIPLOMA / TRICHY“ என்று குறிப்பிடவும்.
தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
9/1, மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர்,
ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600032.
தொலைபேசி: 9444079926 / 9500045865 (மா.கருப்புசாமி) /
9445103775 (பா.கந்தசாமி)