தாளநுட்பங்களைப் பழங்காலத்திலிருந்தே அறிந்து வைத்துள்ளனர்!
இன்றைய நிலையில் தாளத்தைப் பற்றி நன்கு அறிவதற்கு ஏற்ற முறையில் தாள சமுத்திரம், சச்சப்புட வெண்பா, தாள தீபிகை, தாளமும் அனுபவமும்
ஆகிய நூல்கள் தமிழில் அச்சுப்பதிப்பாகக் கிடைக்கின்றன. வாத்திய மரபு என்ற
நூல் சுவடிவுருவில் கிடைத்துள்ளது. இவை அனைத்தும் தமிழர் இசையிலுள்ள
தாளத்தின் வகைகளையும் அவற்றின் அமைப்புக் கூறுகளையும் மிகச் சிறப்பாக
விளக்குகின்றன. இவை தவிர, பத சங்கிரகம் என்ற பழைய நூல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தால் பதிப்பித்து வெளியிடப் பெற்றுள்ளது. இது நாட்டியம்,
தாளம் ஆகியவற்றை விளக்கிக் கூறும் நூல். நூற்றுஎட்டுத்தாளங்களைப் பற்றி
வெண்பா பாடலமைப்பில் விரிவாகக் கூறுகிறது.
தாளவகை ஒத்து என்று
பழமையான தாள நூலைப்பற்றி அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார். மிகப்
பழங்காலத்திலிருந்தே தாளத்தைப் பற்றிய நுட்பங்களைத் தமிழ் மக்கள் நன்கு
தெரிந்துள்ளனர் என்பதை இந்த நூல்களின் வாயிலாக அறியலாம்.
முனைவர் அ.நா.பெருமாள்:
வாத்திய மரபு: பக்கம்6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக