‘முதல் மொழி தமிழே!’  – மின்னூல் பதிவு நாள் நீட்டிப்பு!

  வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக ‘உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!’ என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் கேட்டிருந்தோம்.
  எமது அறிவிப்பைப் பணிவோடு ஏற்றுத் தமிழ்ப் பற்றாளர்கள் ஒன்பதின்மர்  தமது படைப்புகளை அனுப்பி இருந்தனர். சிலர் கால நீடிப்புக் கேட்டிருந்தனர். எல்லோரது ஒத்துழைப்பும் அல்லது எல்லோரது கூட்டு முயற்சியும் தான் ‘உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!’ என்ற மின்நூலை வெளியிடப் பின்னூட்டியாக இருக்கும். எனவே,

 வைகாசி 01, 2048 / 16-05-2017 ஆம் நாள் வரை

இம்மின்நூலுக்கான உங்கள் பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
 உங்கள் பதிவுகளை ‘மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017’ –https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html என்ற பதிவில் குறிப்பிட்டவாறு தங்கள் படம், தங்களைப் பற்றிய சுருக்கம் (நான்கைந்து வரிகளில்), தங்கள் வலைப்பூவில் வெளியிட்ட பின் அதன் இணைப்பு ஆகியவற்றை wds0@live.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
 நன்நூல்.காம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து தாலர் பெறுமதியான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். பதிவுகளை அனுப்பிவைக்கும் அறிஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இவ்வொழுங்கு மூவர் என்ற நிலையைக் கடந்து நால்வருக்கு அல்லது ஐவருக்குப் பத்து தாலர் பெறுமதியான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) வழங்க எண்ணியுள்ளோம்.