3
தமிழின் தனிப்பெருந் தன்மைகள்
- தாய்மை
பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் குமரிநாட்டுத் தமிழ்ச்சொற்கள், ஆரியம் உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.
நூன், நூம் என்னும் பண்டைத் தமிழ் முன்னிலைப் பெயர்கள், வடநாட்டு இந்தியில் து, தும் என்றும், இலத்தீனில் து, வேஃச்(ஸ்) என்றும், கிரேக்கத்தில் தூ (சூ), ஃக(ஹ்)மேயிஃச்(ஸ்) என்றும் பழைய ஆங்கிலத்தில் தூ, யி(யூ) என்றும், சமற்கிருதத்தில் த்வம், யூயம் என்றும் முறையே திரிந்து வழங்குகின்றன. அல்லது வழங்கியிருக்கின்றன.
மேலை மொழிகளிலுள்ள தென்சொல்லொத்த சொற்கட் கெல்லாம் மூலம் தமிழிலேயே இருக்கின்றன.
எ-டு :
அயற்சொல் | தமிழ்ச்சொல் | மூலம் |
இலத்தீன்-மன்சூஃச்(ஸு ஸ்) | மனை | மன் |
கிரேக்கம்-மாஃச்திகோஃச்(mastigos) | மத்திகை | மொத்து |
ஆங்கிலம்-துரூ | துருவ | துள் |
துருக்கி-கான் | கோன் | கோவன் |
கொரொ | கரு | கள் |
சீன மொழியில் மா என்பது குதிரையையும் தா என்பது வலிமையையும் குறிப்பதாகச் சொல்லப்படுகின்றது.
தமிழின் சொல்வளத்தைக் குறிக்க வந்த
கால்டுவெலார். அம் மொழி தனக்கே சிறப்பாக வுரிய வீடு என்னும் சொல்லை
மட்டுமன்றி, இல் என்னும் தெலுங்கச் சொல்லையும், மனை என்னும் கன்னடச்
சொல்லையும்,
சமற்கிருதத்திற்கும் பின்னிய (Finnish)
மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும், தன்னகத்துக்
கொண்டுள்ளதென்று, அது திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும்
என்னும் உண்மையைக் குறிப்பாகக் கூறியிருக்கின்றார். மேலும், தமிழ் உலக
முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், ஆரியத்திற்கு முந்தியதென்றும்,
பல்வேறிடங்களில் வெளிப்படையாகவும் கூறியுள்ளார். சமற்கிருதத்தில் ஐந்தி
லிருபங்கு தமிழ் என்பது இன்று ஆராய்ச்சியால் தெரியவருகின்றது.
ஆ, ஈ. ஊ என்னும் முத்தமிழ்ச்
சுட்டெழுத்துகளினின்றே ஆரியச் சுட்டுச் சொற்களும் படர்க்கைப் பகரப்
பெயர்களும் (Demonstratives and pronouns of the third Person) தோன்றிப்
பற்பலவாறு திரிந்து வழங்கு கின்றன. பல ஆரிய அடிப்படைச் சொற்களும்
தமிழாயிருக்கின்றன.
எ-டு: இலத்தீன் amo (அமர்), ser (சேர்), do (தா). அமர்தல் – அன்பு கூர்தல்.
சுருங்கச் சொல்லின், தமிழ்ச்சொல்லே யில்லாத உலகப் பெருமொழி ஒன்றுமே யில்லை யென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் :
செந்தமிழ்ச் சிறப்பு
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக