தலைப்பு-தமிழ்தனிமொழியே,பரிதிமாற்கலைஞர் ; thalaippu_thamizh_thanimozhiye_parithimalkalaignar

தமிழ் தனிமொழியே!

தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சார்ந்ததே ‘தனிமொழி’ எனப்படும். பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியினுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்குத லொல்லா; மற்றுத் தமிழ்மொழி அவற்றினுதவியில்லாமலே சிறிது மிடர்ப்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது. இஃது இந்திய மொழி நூற்புலவர்கள் பலர்க்கும் ஒப்ப முடிந்தது. ஆதலின் தமிழ் தனிமொழியேயென்க.
 பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரியநாராயண (சாத்திரி) : தமிழ் மொழியின் வரலாறு