ஞாயிறு, 9 அக்டோபர், 2016

துபாயில் சிறுநீரகப்பாதிப்புற்ற தமிழ்ச்சிறுவனுக்கு மருத்துவப் பொருளுதவி தேவை!


துபாயில் சிறுநீரகப்பாதிப்புற்ற தமிழ்ச்சிறுவனுக்கு மருத்துவப் பொருளுதவி தேவை!

 ; thalaippu_maruthuva-uthavi
துபாய்  மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால் 
மருத்துவம் பெற்று வரும் தமிழகச் சிறுவன்
சிகிச்சைக்கான கட்டணம் செலுத்த முடியாமல்
வேலையில்லாமல் தவித்து வரும் தந்தை,
உதவிட வேண்டுகோள்

துபாய் :
  துபாய்  மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால் தமிழகச் சிறுவன்  (இ)ரீகன் பெய்த்து பால் (அகவை 7)  பண்டுவம்பெற்று வருகிறார். இவரது  மருத்துவக் கட்டணததைச் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் இருந்து வரும் அவரது தந்தை தவித்து வருகிறார். நல்ல மனம் கொண்டவர்கள் இந்த மருத்துவத்திற்காக உதவிடவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
  துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் எபி பால் அந்தோனி (அகவை 38) பணிபுரிந்து வந்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவரது ஏழு  அகவை மகன்  (இ)ரீகன் பெய்த்து பால். சிறுநீரகம் பாதிப்படைந்து துபாய் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். எபி வேலை செய்து வந்த நிறுவனம் சமீபத்தில் அவரை நீக்கி விட்டது. இந்த நிலையில் சீறுநீரகம் பாதிப்படைந்த மகனின்  மருத்துவத்திற்குத்  தேவையான பணத்தைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
 இந்த சிறுவனின் சிறுநீர்ப்பிரிப்பிற்கு(dialysis) ஒரு வருடத்துக்கு  நூறாயிரம் திர்ஃகாம் தேவைப்படுகிறது. மருந்துகளுக்காக ஒரு வருடத்துக்கு 60,000 திர்ஃகாமும் தேவைப்படுகிறது. இந்த  மருத்துவத்தின் போதுசிறுவனின் உடல் நிலை சீராவதைப் பொறுத்துச் சிறுநீரக மாற்று அறுவையும் மெற்கொள்ளப்பட வேண்டும்.
  இந்தச் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற போதிய பணமின்றி அவரது தந்தை தவித்து வருகிறார். எனவே இச்சிறுவனின் மருத்துவத்திற்கு உதவிட விரும்புவோர் சிறுவனின் தந்தையைத் தொடர்பு கொண்டு உதவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு எண் : 056 280 2283
வங்கிக் கணக்கு எண் :
 வங்கி அபுதாபி வணிக வங்கி (Bank : ADCB)
 கிளை:  அல் ரிக்கா சாலை Branch: Al Riggah Road
 க/எண்  A/c. No.: 10349850214001
  பன்னாட்டு வங்கி எண்( IBAN) ஏஇ AE350030010349850214001.
-முதுவை இதாயத்து