சீவனா ;seevana

சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்!

போரின் நெருப்பில் சிரிப்பை இழந்த மழலை! தீருமா அவளின் வேதனை?
 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதக் காலப்பகுதியில் தமிழின அழிப்பின் மிக உச்சக்கட்ட நடவடிக்கைகள் புதுமாத்தளன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தன. அத்தருணத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்தனர்.   அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மிகக் கொடூரமாக அங்கவீனமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு உடுப்புக்குள ஊரைச் சேர்ந்த இரத்தினராசா  சீவனா (அகவை 11) என்னும் சிறுமி, படுகொலை நடவடிக்கையில் சிக்கிப் போர்க்காயங்களுடன் ஊனமாக்கப்பட்டு மீண்டுள்ளார்.
  2009 ஆம் ஆண்டு  சீவனாவின் தந்தை தனது குடும்பத்தைப் போரிலிருந்து பாதுகாக்க பதுங்குகுழி ஒன்றை அமைத்துக் கொடுத்துவிட்டுச் சிறியவேலை ஒன்றிற்காக வெளியே சென்று வீடு திரும்பிய வேளை  படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் சிக்கி அவ்விடத்திலேயே மரணித்தார். பதுங்குகுழியில் இருந்த மழலை  சீவனா அப்பாவிற்கு என்னாயிற்று என்று பார்ப்பதற்கு  ஓர் அடி எடுத்து வெளியே வருகையில். மறுபடியும் விழுந்த எறிகணைகள் வெடித்ததில் அவளின் இடக்கால் துண்டிக்கப்பட்டுள்ளது.  குறித்த  நிகழ்வு 2009-03-27 ஆம்  நாள் நடந்ததாகவும் அதில் தனது கணவரும் தந்தையும் இறந்துள்ளதாகவும் தாயார்  இல.சுபத்திரா (அகவை 44)  குறிப்பிட்டுள்ளார்.
  அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏழு ஆண்டுகள் ஆகியும் எமக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை எம்மை யாரும் வந்து பார்க்கவுமில்லை.  ஆனால் நாங்கள் பாதிப்படைந்து இருந்த போது எடுக்கப்பட்ட  ஒளிப்படங்கள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவந்ததாகவும்,  அரசியல் கட்சிகள்,  பதாகை அடித்து ஆர்ப்பாட்டங்கள் செய்ததாகவும் தெரிவித்துள்ளவர் தற்பொழுது பிள்ளைகளின் படிப்புச் செலவிற்கும் வறுமைக்கும்  சீவனாவின் ஆசிரியை ஆகப்போகும் கனவிற்கும் தான் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
  போர்க் காயங்கள்; தந்தையின் இழப்பு, தாயின்  துன்பங்கள் எல்லாவற்றையும் நினைக்கும் போது மனவேதனையாக உள்ளதாகச் சிறுமி  சீவனா குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புகளுக்கு;-  0094770261555
பெயர்  :  சுபத்திரா (SUBATHTHIRA LAINARRATHTHINARASA)
கணக்கு எண்  020200130026508   மக்கள் வங்கி / PEOPLE BANK
[NIC :726553912V
ADT. UDUPPUKULAM
ALAMPIL ]