வள்ளுவர் வேள்விக்கு எதிரான
எதிர்ப்புக் குரலை எழுப்பினார்
வேள்விகளைச்செய்து ஆற்றலைப் பெறலாம். அடைதற்கரியனவற்றை அடையலாம் என்ற கூற்றில் மயங்கி வேள்வியை அறியாத் தமிழ்நாட்டில் வேள்வி செய்தலைப் பெருங்கடனாகச் செய்தனர் சிலர்.
தமிழரசர்களில் சிலர் எளிதில் எதையும் பெறலாம் என்று எண்ணி வேள்விகளைச்
செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளி்த்தனர். பல வேள்விகைளச்செய்த அரசர்க்குப்
பல்வேள்வி செய்தான் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. பல்யாகசாலை
முதுகுடுமிப் பெருவழுதி என்பதே சான்றாகும்.
அவ்வேள்விகளில் ஆடு, மாடு, குதி்ரைகளைக்
கொன்றனர். மக்கள் நலன்அடைய மாக்களைக் கொல்லுதல் அறமாகுமா? பேரருளாளர்
வள்ளுவர் தம் எதிர்ப்புக் குரலை எழுப்பினார். அரசச் சீற்றத்திற்கு ஆளாவோமே
என்று அஞ்சினார் இலர். அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து
உண்ணாமை நன்று என ஓங்கி முழங்கினார். வேள்விகைளச் செய்யாதே ; வீணில்
உயிரைக் கொல்லாதே என்பது வியத்தகு புரட்சி அன்றோ? வேந்தரை எதிர்ப்பது
அக்காலத்தில் சாகும் தண்டனைக்கு ஆட்படுத்துமே!
– பேராசிரியர் சி.இலக்குவனார்,
திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர்
குறளமுதம் : பக்கம் 521 . 522
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக