வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது
அறநெறிகளைத் தொகுத்துத்
தரும் திருவள்ளுவர், உயர்வுதாழ்வு கற்பிக்கும் தீய முறைக்கு
எதிரானவற்றையும் ஆங்காங்கே பதியத் தவறவில்லை. இதன் காரணம், தன்னலம் கருதாது
பிறர் நலம் பேணும் பெற்றிமை மிகுந்த தமிழ் மக்கள் உதவிக்கும் உரிமைக்கும்
உள்ள வேறுபாட்டினை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான். இடர்களையவும்
துணைநிற்கவும் வேண்டும். கைம்மாறு கருதாமல் உதவுவது என்பது வேறு.
உழைப்பின் பயனை அடுத்தவர் ஏய்த்துத் துய்க்க, நாம் ஏமாளியாய் அடிமையாய்
இருப்பது என்பது வேறு. முன்னதைக் கைம்மாறு வேண்டா கடப்பாடாகத் திருவள்ளுவரும் வலியுறுத்துகிறார்.
பயன்நோக்கில் உழைப்பது சரியா? தவறா? ஈண்டு அனைவராலும் சிறப்பாகக் கூறப்படும் கீதையின் வரியை நினைவு கூர்வோம்.
“கடமையைச் செய் பயனை எதிர்பாராதே’ என்பதுதான் அது. ஆனால் உண்மையில் கீதை கூறுவது என்ன? அஃது எற்புடையதா? என்றால் கீதை கூறுவது முற்றிலும் தமிழ் அறத்திற்கு முரணானது என்பதே உண்மையாகும்.
… …. மேலும், தமது வருணம், ஆசிரமம்
இவற்றிற்கேற்ப சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்ற வேண்டும்.
இதற்குப் பயனைத் தியாகம் செய்ய வேண்டும் (5, 12, 2.1, 12.11, 18, 11.,)
என்றும் சில இடங்களில் பற்றைத் தியாகம் செய்ய வேண்டும் (3., 19, 6.4)
என்றும் சில இடங்களில் பயன், பற்று இரண்டையும் தியாகம் செய்ய வேண்டும் (2,
47., 48., 18., 6, ஈ9) என்றும் கீதையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன்
தத்தம் வருணத்திற்குரிய கடமைகளைச் செய்து அவரையே வழிபட வேண்டும் (18.40)
என்றும் அவருடைய ஆணையின்படி பகவானுடைய “திருப்தி’க்காகவே சாத்திரங்களில்
விதிக்கப்பட்ட கடமைகள் ஆற்றப் பெறுகின்றன. (3.30, ஈ 12.6., 18) என்றும் எந்த வருணத்துக்கு எந்த கடமை விதிக்கப்பட்டதோ அதை அந்த வருணத்தவரே கடைப்பிடிக்க வேண்டும்; மற்றவர் செய்யக்கூடாது என்றும் விளக்கப்படுகின்றன.
ஆகக் கடமையைச் செய் என்பது
மாந்தருக்குரிய பொதுவான கடமையைக் குறிப்பிடவில்லை. அவரவர் சாதிப்
பாகுபாட்டிற்கேற்ற தொழிலைச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கிறது.
திருவள்ளுவர், உழைப்பு உயர்விற்குரிய கருவியேயன்றி, செய்யும் பணியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை என வலியுறுத்துகிறார்.
எனவே, திருவள்ளுவர் வகுக்கும் உழைப்புநெறியே உயர்வானது. உலகெங்கும் ஏற்பதற்குரியது. என்றென்றும் பின்பற்றுவதற்குரியது.
வாழ்க வள்ளுவம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்,
திருவள்ளுவர் காட்டும் நெறிகள்:
உழைப்பு நெறி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக