தமிழ் இலக்கிய வரலாற்றின் தவிர்க்க இயலாப் பெயர் வைதேகி எர்பர்ட்டு. தூத்துக்குடி தந்த நன்முத்தான திருவாட்டி வைதேகி எர்பர்ட்டு, சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நூலாக்கத்துடன் சங்க இலக்கியப் பரப்புரைக் களமும் நடத்தும் வைதேகி அம்மையார், எந்தப் பொதுநிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெறாமல், தன்னுடைய சொந்தச்செலவில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பின்பற்றி, கவினியன், தமிழுலகு நன்மை எய்த குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பைக் கொணர்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது.
  இவ்வாறான 93 குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பை, மொரிசீயசு தமிழன்பர் கவினியன், நூலாக உருவாக்கி வரும் நவ.19, 2015 அன்று வெளியிட்டு விழாவும் நடத்துகிறார்.
    “திருமிகு வைதேகி தொடக்கத்தில் தன் மொழிபெயர்ப்புகளை இணையத்தில் வலையேற்றினார். இதனால் இணையப் படிப்பாளர்கள் பயன்பெற்றனர். பிறகு அவர் அமெரிக்காவிலும் கனடாவிலும் பல ஊர்களில் சங்கப்பாடல்களைப் படிக்கும் பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகிறார். இதனால் தமிழொளி பெற்ற பலரும் அவ்வொளியை மேலும் பல இடங்களில் பரப்பி வருகின்றனர். அத்தகைய ஒளிப்பொறிதான் கவினியனின் குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பு” என்கிறார் பேரா.இராசம் இராமமூர்த்தி அம்மையார்
   எனவே, குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பு (“Le paysage intérieur”) நூலை வெளிக் கொணரும் கவினியனை ஊக்கப்படுத்த
  மொரிசியசு தமிழன்பர்கள் விழாவில் திரண்டு பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.

நூலின் வெளியீட்டு நாள்

கார்த்திகை 03, 2046 / நவம்பர் 19, 2015

மாலை 6.00 மணி

மொழிபெயர்ப்பாளர் கவினியன்  – சிறு அறிமுகம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
செய்தியாளர்
மொரிசீயசு அரசின் கல்வி  மனிதவளத் துறையின் ஆசிரியப் பணியாளர்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
பேச்சாளர்
தொண்டர்
கணித்தமிழ் ஆர்வலர்
இலக்கிய ஆர்வலர்
azhai-kurunthokai-french01