புதன், 5 ஆகஸ்ட், 2015

தமிழ்க் கடவுள் வணக்க வழிபாட்டை ஆரியத் தொடர்பால் ஏற்பட்டதாகத் திரித்துக் கூறினர் – சி.இலக்குவனார்

kadavulvazhipaadu
  திணையைக் குறிப்பிடும் பொழுது அத்திணைக்குரிய இயற்கை வளத்தையோ உற்பத்தியான விளைபொருளையோ குறிப்பிடுவது வழக்கமாகும்; என்ற போதும் தொல்காப்பியர் பல்வேறு திணைகளுக்குரிய முதன்மையான தெய்வங்களையும் அவற்றின் முதன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் தெய்வத்தன்மை முதன்மையையும் மக்களுக்குரிய இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களை குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, முருகன், இந்திரன், வருணன் என்ற முடிவுக்கும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கடவுள் வணக்க வழிபாடுகள் ஆரியர்களுடனான தொடர்பால் ஏற்பட்டது என்ற முடிவுக்கும் கொண்டு வந்துவிட்டது.
– பேராசிரியர் சி.இலக்குவனார்:
தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்
(Tholkāppiyam in English with critical studies) பக்கம்397-398
தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல90, ஆடி 17, 2046 /ஆக. 02, 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக