செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

அரும்பத உரையாசிரியர் ஒரு முத்தமிழறிஞர் – மு.அருணாசலம்

tha.ila.va.11aam-nuutraandu-attai01
அரும்பத உரையாசிரியர் ஒரு முத்தமிழறிஞர்
  இவ்வுரை அரும்பதவுரை மட்டுமன்று. வினைமுடிபு காட்டுதல், பொருள் தொடர்பு காட்டுதல், அரங்கேற்றுக் காதையிலும் கானல் வரியிலும் இன்று அடியார்க்கு நல்லார் உரை இல்லாத பிற பகுதிகளிலும் பேருரையும் பெருவிளக்கமும் கூறுதல், மேற்கோள் தருதல் முதலிய பகுதிகளைப் பார்க்கும்போது, இவ்வுரை அரும்பதவுரை அன்று, அரிய உரை என்றே கருதத் தோன்றும். சில இடங்களில் விரிவான பொழிப்புரையே கூறியிருக்கிறார். (3:26: 36 பார்க்க); இதைத் தொடர்ந்து அரும்பதவுரை மட்டுமல்லாமல் விளக்கவுரையே கூறிவருகிறார். இவற்றால் இவர் மிக்க விரிவு பெற்ற உரை எழுதவல்ல முத்தமிழாசிரியர் என்பது நன்கு விளங்கும். எங்ஙனம் இளங்கோவடிகள் முத்தமிழ்ப் புலமை வாய்ந்த பேராசிரியரும் பெரும்புலவருமாவாரோ, அப்படியே இவ்வரும்பதவுரை எழுதிய உரைகாரரும் முத்தமிழ்ப் புலமை பெற்றிருந்தமை இளங்கோவடிகள் நூல்செய்த பாக்கியம்.
-பன்முக எழுத்தாளர் மு.அருணாசலம்:
தமிழ் இலக்கிய வரலாறு 11-ஆம் நூற்றாண்டு: பக்கம்.42
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக