நமது நாட்டிற் போலவே வேறு பல நாடுகளிலும்
யாழ்க்கருவி தெய்வமாகப் போற்றப்பட்டது. பண்டை நாளிலே சீரும் சிறப்பும்
எய்தியிருந்த மிசிரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீக
கடற்கரையிலிருந்து அழிந்து போன சுமேரியா நாட்டிலும், சோழர் குடியேறினமையாலே
சோழதேயம் என்னும் பெயரினை எய்திப் பிற்காலத்திலே மொழிச் சிதைவினாலே
சால்தேயா என வழங்கப்பட்ட தொல்பதியினிலும், சேரர் குலத்தார் கலத்திற் சென்று
வெற்றி பெற்றுத் தம்மாணை செலுத்திய கிரேக்கத் தீவிலும், அதற்கணித்தாகிய
யவனபுரத்திலும், உரோமர் வருவதற்கு முன்பழைய இத்தாலி தேசத்திலும், ஐபீரியா
எனப்பட்ட பழைய இஃச்பெயின் சேத்திலும், பிற இடங்களிலும் தமிழ்க் குலத்தார்
வாழ்ந்து, நாகரிகம் பரப்பினார்களென மேற்றிசை அறிஞர் ஆராய்ச்சியால் கண்டு
வெளிப்பட்டிருக்கின்றனர். இந்நாடுகளிளெல்லாம் யாழ்க்கருவியும்
போற்றப்பட்டது.
சிந்து நதி தீரத்திலே, முன்னாளிலே,
பாண்டிய மன்னரது ஆளுகையிலே, மீனாடு என்னும் பெயரோடு திகழ்ந்ததும்
பின்னாளிலே இறந்தோர் மேடு என்னும் கருத்துடைய ‘முகிழ்ந்ததரை’ என்னும்
பெயரெய்தியதுமாகிய பழைய நாட்டிலே, மிதுன இராசியானது யா
ழ் என்னும் பெயரினால் வழங்கப்பட்டு, இணையாழ் உருவத்திலே குறியீடு செய்யப்பட்டதென அறிஞர் கூறுவார்.
- தவத்திரு விபுலானந்த அடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக