சிலப்பதிகாரமும் அதற்குரிய அரும்பதவுரை,
அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் தமிழிசைபற்றி அறிவித்துள்ள கருத்துகள்
அளவில் இன்றைய அறிவுக்கும் மிஞ்சியதாக அமைந்திருப்பதைக் கண்டு தமிழிசையின்
வாழ்வையும் வளர்ச்சியையும் கருதிக் காணலாம். இவற்றுள் விளக்கப் பெற்றுள்ள
கருத்துகள் உலகில் வேறு எந்த நாட்டிசைக்கும் அமைத்துக் காணப்படாதவை.
ஓசையின் அளவு, இசையமைப்பு, பண்ணமைப்பு, பாடலமைப்பு, தாளவகை, தூக்கு,
பிண்டி, பிணையல், வரிப்பாட்டு, வண்ணங்கள், யாழிசை, குழலிசை, ஏழிசை, இசை
அலகு பெறல், பண்களின் பெயர்கள், இசையின் எண்கள் முதலியவற்றைத் தனித்தனியாக
விளக்கிக் காட்டும் அளவுக்குத் தமிழிசை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
திருத்தமாகவும் விளக்கமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது.
- முனைவர் ஏ.என்.பெருமாள்: தமிழர் இசை: பக்கம் 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக