சனி, 29 நவம்பர், 2014

தேனியில் சீர்கெட்ட அரசுப்பேருந்துகள்

தேனியில் சீர்கெட்ட அரசுப்பேருந்துகள்


54rain-on-bus-window

தேனிப் பகுதியில்

பேணுகையின்றி இயங்கும்

அரசுப்பேருந்துகள்

  தேனிப்பகுதியில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் பேணப்படாமல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
  தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி வழியாக குள்ளப்புரம் செல்கின்ற அரசுப்பேருந்துகள் தக்கமுறையில் பேணப்படுவதில்லை. இதனால் மழைக் காலங்களில் பேருந்துகளில் மழைத்தண்ணீர் கூரையின் வழியாக வந்து பொதுமக்கள் குடைபிடித்துச்செல்லும் அவலநிலை உள்ளது.
  சில பேருந்துகளில் இருக்கைகள் உடைந்துள்ளன; உடைந்த இருக்கைகளின் இரும்புத்துகள்கள் பயணிகளுக்கு இரத்தக்காயம் ஏற்படுத்திவிடுகிறது. மேலும் பேருந்தின் நடுப்பகுதி, ஓட்டுநர் அண்மையில் பெரிய பெரிய ஓட்டைகள் உள்ளன. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பேருந்திலிருந்து கீழே விழுந்து மரணத்தைத் தழுவும் நிலை உள்ளது.
  எனவே நகரப்பேருந்துகளை உரியவாறு பேணியோ மாற்றுப்பேருந்துகளை இயக்கியோ மக்களின் அல்லல்களைப் போக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
54vaikaianesu_name
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக