சங்கக் காலத்தில் தமிழ் நாட்டின்பரப்பு,
வடக்கே திருப்பதியிலிருந்தும் தெற்கே பூமையக்கோடு வரைக்கும் பொருந்தி
கிழக்கிலும் மேற்கிலும் கடல்களே எல்லைகளாக இருந்தன.
ஒருகாலத்து வடவிமயம் வரை, தமிழ்நாடாக
இருந்தது. பின்னர் விந்தியமலைவரை சுருங்கியது. … பழைய தமிழ்நாட்டின்
பரப்பைப் பெறமுடியாது போனாலும், எஞ்சியுள்ள தமிழ்வழங்கும் பகுதிகளை
ஒன்றுபடுத்தித் தமிழ்நாட்டின் எல்லையை வரையறுத்தல் வேண்டும். இந்தியமாப்
பெருங்கடலைக் குமரிக்கடல் என்றே அழைக்கச்செய்யவேண்டும்.
உலகப்பொது அரசு ஏற்படும் காலத்து நாம் உலக
மக்களுள் ஒரு பகுதியினரே. மற்றைய கண்டங்களிலுள்ள மக்களோடு ஒப்பிடும்போது
நாம் ஆசியக் கண்டத்தினரே. ஆசிய கண்டத்தில் உள்ளநாடுகளாகப் பார்க்கும்
காலத்து நாம் இந்தியரே; இந்தியாவிலுள்ள நாடுகளாகப் பார்க்குங்கால் நாம்
தமிழரே. ஆதலின், உலகப்பொதுவரிசை விரும்பினாலும், ஆசியாவின் முன்னணியை
அமைத்தாலும் இந்தியாவின் இணையற்ற வல்லரசை ஏற்படுத்தினாலும், ‘தமிழ்நாடு’ எனத் தனிநாடுஅமையவேண்டியதே.
அவ்விதம் அமைந்தால்தான் முற்கூறிய இந்தியாவின் இணைக்கப்பட்ட வல்லரசிலும்,
ஆசியாவின் முன்னணிப் போரிலும், உலகப் பொதுமன்றத்திலும்தமிழன் என்று கூறித்
தலைநிமிர்ந்து நிற்கமுடியும்.
- செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்:சங்க இலக்கியம்: பக்கம். 47 – 48
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக