மழையால் சேதமடைந்த சாலைகள்
சீரமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தல்
தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை
பொழிந்ததால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு
ஆளாகி வருகின்றனர்.
தேவதானப்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு
வரை செல்கின்ற சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து காமக்காபட்டி செல்கின்ற
சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்கின்ற சாலையும்
சேதமடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர
வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் சாலையோரத்தில் கடை
வைத்திருப்பவர்கள் தங்கள் கடையில் மழைத்தண்ணீர் தெளிக்கக்கூடாது
என்பதற்காகச் சாலைகளில் கற்களை வைத்துவிடுகின்றனர். இதனால் இரவு நேரத்தில்
செல்பவர்கள், இருசக்கர வாகனஓட்டிகள் அக்கற்களின் மீது ஏறிப்
படுகாயமடைகின்றனர். இச்சாலைகளில் பயணிப்பதால் வாகனங்களின் உருளிப்பட்டைகள்
பழுதாகின்றன.இவற்றைத் தவிர இருசக்கர வாகனங்களில் செல்பவர்களைச் சுமையுந்து,
பேருந்து போன்ற பேரூர்திகள் உரசிச் சாலையில் இருந்து கீழே
விழுந்துவிடுகின்றனர்.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக