தேனிப் பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் மூடப்படும் பேரிடர்(அபாயம்) உள்ளது.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி
பகுதிகளில் தென்னை மரத்தின் மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில்
குடிசைத்தொழிலாக நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள்
வாழ்ந்து வருகின்றன. தென்னை மட்டைகளின் நார்கள் வெளிநாட்டிற்கு அதிக
அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் செங்கல் போன்று கடினமாக்கப்பட்டு
அதனையும் வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள்.
இதனால் அதிக விலை கொடுத்தும்முன் தொகை
கொடுத்தும் தென்னை மட்டைகளை வாங்கிச்செல்கின்றனர். தற்பொழுது
குடிசைத்தொழிலாக உள்ள இத்தொழில்போதிய மூலதனத்துடன் நடைபெறுவதில்லை. இவை
தவிர கடந்த சில வருடங்களுக்கு முன்னர்க் கூட்டுறவு முறையில் கயிறு
திரிக்கும் தொழில் நடைபெற்று வந்தது. தற்பொழுது தேவதானப்பட்டி பகுதியில்
அந்தத் தொழிற்சாலையும் மூடப்பட்டு விட்டது.
இதனால் பலர் சேலம்ஓமலூர் பகுதிகளுக்கு
வேலைக்குச் சென்றுவிட்டனர். இவை தவிர சீனாவில் இருந்து தரமான கயிறுகள்
குறைந்த விலைக்குக் கிடைப்பதாலும் நொசிவிழை(நைலான்) மலிவாகக் கிடைப்பதாலும்
அவற்றின் விலைக்கு இவர்களால் கொடுக்க முடியவில்லை. இதனால் கயிறு உற்பத்தி
செய்யும் குடிசைத்தொழில் நாளுக்கு நாள் மூடப்பட்டு வருகிறது.
எனவே நலிந்த இத்தொழிலை மேம்படுத்த அரசு சார்பில் நல்கையுடன் கூடிய கடன்வழங்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக