kavithai-inaiyakalanjiyam
வணக்கம்.
இக்காலத் தமிழ்க் கவிதைபற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்கி இணையத்தில் வெளியிட விழைகிறேன். இக்காலத் தமிழ்க்கவிஞர்களின்படைப்புகள் குறித்த தகவல்களும் கவிஞர்களின் வாழ்க்கை-வரலாறும் முழுமையாகத்தொகுக்கப்படவேண்டும்.வெறும்விவரப் பட்டியலாக அமைந்துவிடாமல் இக்காலத்தமிழ்க்கவிதை வளர்ச்சியைக் காட்டும் ஆவணமாக இக் களஞ்சியம் அமைய வேண்டும்.ஆயிரக்கணக்கான தமிழ்க்கவிஞர்களையும் பல்லாயிரக்கணக்கான கவிதைநூல்களையும்தொகுத்து வழங்குதல் எளிய முயற்சியன்று.அதேநேரத்தில் அனைத்துக் கவிஞர்களும்ஒத்துழைத்தால் இப் பணியை முழுமையுற நிறைவேற்றிவிட முடியும்.கீழ்க்காணும்தரவுகளை ஒருங்குகுறி (யூனிகோடு)அச்சுருவில் அனுப்பி உதவுக.

என் மின்னஞ்சல்:maraimalai@yahoo.com

1) வாழ்க்கைவரலாறு/தன்விவரம்
2) கவிதைப்பணி:முதலில் வெளிவந்த கவிதை-கவிதை வெளிவந்தஇதழ்கள்–காலம்-கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த காலம்–பெற்றவிருதுகள்/பாராட்டுகள்
3) கவிதைத் தொகுப்புகள்- ஒவ்வொரு நூலைப் பற்றியதனித்தனி விவரம்.
ஒவ்வொரு நூலுக்கும் ஒரு பக்கம் எடுத்துக்கொள்ளலாம்.நூலின்தலைப்பு, வெளியிட்ட ஆண்டு,பதிப்பகத்தின் பெயரும்முகவரியும், நூலின்உள்ளடக்கம்(இயல்கள்/தலைப்புகள்) ஆகியவை வேண்டும்.அத்துடன்நூலுக்கு வழங்கப்பெற்ற அணிந்துரை/வெளிவந்த மதிப்புரையின் பகுதிகளும்தேவை.நூலை அறிமுகப்படுத்தும்வகையில் இவை அமையும்.
4) கவிதைத்தொகுப்பு, காவியம், கவிதைநாடகம், கதைக்கவிதை, வரலாற்றுக்கவிதை எனப் பல்வேறு வகைகளில்தங்கள் நூல்கள் அமைந்துள்ளனவாயின் விவரமாகச் சுட்டிக்காட்டப்பெற வேண்டும்.
5) படங்கள்-கவிஞர்களின் படங்கள்,விருதுபெறல்,மணிவிழா போன்ற சிறப்புநிகழ்வுகளின் படங்கள், நூல்களின் அட்டைப்படங்கள்
இவற்றை வழங்குமாறு கவிஞர்களை வேண்டுகிறேன்.
தரவுகளைச் சொல்கோப்பில்(எம்.எசு.வோர்டு) அனுப்புக.
படங்களைக் (jpg./mpg) கூடுமானவரை சிறியஅளவில் அனுப்புக.
—    மறைமலை இலக்குவனார்-கைப்பேசி–9445407120