திங்கள், 18 ஆகஸ்ட், 2014

குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகரின் நூற்றாண்டு விழா

vizhaa-suntharesanar05
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா ஆடி 27, 2045 / 12.08.2014 இல் சிறப்பாகநடைபெற்றது.
vizhaa-suntharesanar01
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம. திருமலை தலைமையில் விழா நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு இசை – கவின்கலைப் பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர் முனைவர் ஈ.காயத்ரி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு ‘தமிழிசை வளர்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனாரின் பங்கு’ என்னும்நூலை வெளியிட்டார். மேலும் முனைவர் இ.அங்கயற்கண்ணி அவர்கள் பாடிய‘ஆறுபடைவீடு : திருப்புகழ்ப் பாடல்கள்’ என்னும் ஆறுகுறுவட்டுகள் அடங்கியஒலிவட்டுகளையும் வெளியிட்டார்.
vizhaa-suntharesanar02
நூற்றாண்டு விழாவில் குடந்தை ப.சுந்தரேசனாரின் தலைமாணாக்கர்கள் மா.வயித்தியலிங்கன், மா. கோடிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். சென்னைப்பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவர் முனைவர் பிரமீளா முதலான அறிஞர்கள்கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கினர்.முனைவர் மு.இளங்கோவன் ‘பண்ணாராய்ச்சி வித்தகர்குடந்தை ப.சுந்தரேசனாரின் பஞ்சமரபு பதிப்புப்பணி’யைப் பற்றி ஆய்வுரைவழங்கினார். முனைவர் இ.அங்கயற்கண்ணி ஏற்பாட்டில் இந்த நூற்றாண்டுவிழா அமைந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
vizhaa-suntharesanar03 vizhaa-suntharesanar04


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக