pirar-karuvuulam

- தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013

கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்:
பாரதிய சனதா:

vengaiya_mythreyan_kanimozhi01

“கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது.
  “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார்.
கேள்விக்கே இடமில்லை:
 இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில், எதிர்உறுதி ஆவணம் அளிக்கப்பட்டது. அதில், “கச்சத்தீவு இந்திய அரசால், இலங்கைக்கு வழங்கப்படவில்லை; அதனால், அதை மீட்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழக மக்களுக்கு, குறிப்பாக – மீனவர்களுக்கு – பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் பலவும், இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று, இந்தச் சிக்கலை, அ.தி.மு.க., தி.மு.க., – நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவில் எழுப்பினர்.

மன்னருக்குச் சொந்தம்:
 kachatheevu
Ramanathapuram_1784_aranmanai01அப்போது, நடந்த விவாதத்தின் போது, அ.தி.மு.க., – நா.உ., மைத்ரேயன் பேசியதாவது: கச்சத்தீவு என்பது, இராமநாதபுரம் அரசர்க்குச் சொந்தமானது. இதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எல்லாம், இன்றும் தெளிவாக உள்ளன. கடந்த, 1974 இல், கச்சத்தீவைத் தாரை வார்ப்பது தொடர்பாக, அப்போதைய வெளியுறவு அமைச்சர் தினேசுசிங்கு, நாடாளுமன்றில் பேசும்போது, “இந்தியாவின், ஒருங்கிணைந்த அங்கமே கச்சத் தீவு” எனக் கூறியிருந்தார். இதுதொடர்பாக, அப்போது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய, முன்னாள் தலைமையாளர் வாசுபாயும், “இது ஒப்பந்தமே அல்ல. இலங்கையிடம், இந்தியா அடையும், சரணகதிப் படலம்; கச்சத் தீவை ஒப்படைப்பது, முற்றிலும் தவறானது’ எனத் தெரிவித்து உள்ளார். இவை எல்லாமே, நாடாளுமன்ற ஆவணங்களில் இன்றளவும் உள்ளன. இலங்கையில், தமிழர்கள், கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கபட்ட துயர நிகழ்வு, தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் தாக்கும் சிக்கல், கச்சத்தீவை மீட்கும் செயல் என, அத்தனையிலும், தமிழகத்திற்கு எதிரான போக்கையே, மத்திய அரசு மேற்கொள்கிறது. இதற்கு, வரும் தேர்தலில், காங்கிரசோடு கூட்டணி சேரும், எந்த கட்சிக்கும், தமிழக மக்கள் கடுமையான பாடம் புகட்டுவர்.” இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.

இலங்கைக்குச் சொந்தமா?
  பா.ச., மூத்த தலைவர் வெங்கையா (நாயுடு) பேசியதாவது: கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது என, மத்திய அரசு திரும்பத் திரும்ப கூறுகிறது. இதை, உறுதியாக ஏற்க முடியாது. கச்சத்தீவு, நம் நாட்டோடு ஒருங்கிணைந்த அங்கம். அதை, நம்நாட்டிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல் நடத்துவதற்கு அடிப்படையாக, கச்சத்தீவு உள்ளதால், இதுபற்றி விவாதிக்க, உடனடியாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, மத்திய அரசு கூட்ட வேண்டும்.” இவ்வாறு வெங்கையா (நாயுடு) பேசினார்.
தாக்குதல்:
தி.மு.க., -நா.உ. கனிமொழி பேசியதாவது: தமிழக மீனவர்கள், தொடர்ச்சியாகத் தாக்கப்படுகின்றனர். இராமேசுவரத்திற்கும், இலங்கை தலைமன்னாருக்கும் இடையே, வெறும், 20 கல் தொலைவே உள்ளது. இதில்போய், பன்னாட்டுக் கடல் எல்லைக் கோடு வகுப்பதும், அதைத் தாண்டி மீன் பிடிக்க செல்லக் கூடாது எனக் கூறுவதும், ஏற்க முடியாதது. தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு, முற்றுப்புள்ளி வைக்க, கச்சத்தீவு சிக்கலுக்குத் தீர்வு காண, வேண்டும். இதுதொடர்பாக, தி.மு.க., சார்பில், உச்சநீதிமன்றத்தில், முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில், மத்திய அரசு, உரிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.