செவ்வாய், 8 ஜூலை, 2014

தனித்தமிழ் இயக்கம் நடத்திய இலக்கிய விருந்தரங்கம்

தனித்தமிழ் இயக்கம் நடத்திய இலக்கிய விருந்தரங்கம்

ka.thamizhamallan03
ஆனி 17, 2045 / 1.7.2014 செவ்வாய் மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இலக்கிய விருந்தரங்கம் நடைபெற்றது. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அவ்விழாவுக்கு ஆசிரியர் சோ.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். த. தமிழ்த்தென்றல் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறுமி சா.கலைமதி நடன மாடினார். த.தமிழ்நேயன் சிறுவர் பாடல்கள் பாடினார். புலவர் சிவ.இளங்கோவன்,புலவர் இ.பட்டாபிராமன் ஆகியோர் இலக்கியச்சுவைபற்றிப் பேசினர்.
சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் தனித்தமிழ் அறிஞர் க.தமிழமல்லன் அவர்களைப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாவரங்கில் பாவலர்கள் தேவகிஆனந்து, இரா.அருணாசலம், புதுவைப்பிரபா, சனார்த்தன்ன், பொன்னுச்சாமி, சுந்தரமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு இனிய பாடல்களை வழங்கினர்.
எழுத்தாளர் சீ.குமாரகிருட்டின், முனைவர் இரா. சம்பத்து,ச.கு.தெய்வநாயகம்,வள்ளலார் மன்றத் தலைவர் நா.பாலு, உமாகாந்தன், நெய்வேலி உலோ.பசுபதிகரிகாலன், ப.திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். த.தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
முனைவர் க.தமிழமல்லன் எழுதிய ‘தாய்மொழிவழிக்கல்வி’ என்னும் பொத்தகத்தைப் புலவர் அரிமதிதென்னகன் வெளியிட்டார். அதைத் திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். இனிய விருந்துக்குப் பின் இலக்கிய விருந்தரங்கம் இனிதே நிறைவுற்றது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக