வெள்ளி, 4 ஜூலை, 2014

பெரும்புலவர் பேராசிரியர் பா.நமசிவாயம் மறைவு

 
 பெரும்புலவர் பேராசிரியர் பா.நமசிவாயம்  மறைவு
 
 
சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த சிறந்த நாவலர்.

பெரும்புலவர் என்று தவத்திரு அடிகளாரால் இளம் வயதிலேயே பாராட்டப்பெற்ற தமிழறிஞர்.
கம்பனும். வில்லியும் கைகோக்க, சிலம்பும் மணிமேகலையும் சேர்த்து எளியோர் மனங்கொள்ளும் வகையில் எடுத்து மொழியும் சிறந்த பொழிவாளர். 
கோல உரையாடல் வாயிலாக. கம்பனை. வள்ளுவனை. இளங்கோவை, பாரதியை. பாமரரும் அறிய மேடையேற்றிப் பேச வைத்த இயக்குநர். 
அவர் உரையாற்றாத மேடையில்லை எனலாம்.
 தமிழகத்தின் தன்னிகரில்லா அறிஞர்களில் ஒருவர்.
 பழந்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்ற பெருந்தகையாளர்.
 
 பெரும்புலவர் திருப்பத்தூர்.பா.நமசிவாயம் அவர்கள் நேற்று இறைவனடி சேர்ந்தார்.
 
 அன்னார் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

முகநூல் பதிவில் கண்ட செய்தியைப் பகிர்ந்துள்ளேன். பெரும்புலவர் பேச்சில் பலகாலம் பிணிப்புண்ட இரசிகன் நான். பேராசிரியர் குடும்பத்திற்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக