ஞாயிறு, 29 ஜூன், 2014

இராணிப்பேட்டையில் வினைதீர்த்தான் நிகழ்த்திய பயிலரங்கம்

இராணிப்பேட்டையில் வினைதீர்த்தான் நிகழ்த்திய பயிலரங்கம்


vinaitheerththaan.so.01

 
இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வைகாசி 23, 2045 / 6.6.2014 அன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்களில் படிக்கும் 130 மாணவர்களுக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தப்பெற்றது.
தன்னார்வப் பணியில் பெரிதும்ஆர்வம் மிக்க வினைதீர்த்தான் இப்பயிலரங்கத்தை நிகழ்த்தினார்.
மாணாக்கர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் ஏற்படுத்துவதில் பேரார்வம் மிக்க, தலைமை ஆசிரியை திருமதி சந்தானம்   பயிலரங்கத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
பள்ளியின் முதுநிலை ஆங்கில ஆசிரியர் திரு சரவணன் ஒருங்கிணைத்தார்.
உயர்நிலைப் பள்ளி 1928ல் தொடங்கப்பட்ட சிறப்புடையது. இங்குள்ள காந்தியடிகள் சிலையின் பீடத்தில் இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட காந்தி சிலை என்ற குறிப்புள்ளது.இப்பழமையான பள்ளியில் இதுபோன்ற பயிலரங்கம் முதலில் நடைபெற்றது பாராட்டிற்குரியது.
கற்றல், நினைவாற்றல் பெருக்கல் (Registration, Retention, Recall), குறிக்கோள் உணர்தல், குறிக்கோளை வரையறுத்தல், அடைதல், காலம் போற்றல், பெரியாரைப் பேணிக்கொளல், மனித உறவுகள் வளர்த்தல் என்ற வகையில் திருக்குறள், சிறுசெய்முறைகள், கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், வாழ்வியல்நெறி முறைகள் வழி இப் பயிலரங்கம் அமைந்தது. பெற்ற தாய்க்கும், பிறந்த பொன்னாட்டிற்கும், வளர்த்த நூற்றாண்டு காணப்போகும் பள்ளிக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை மாணவர்க்குத் தன்னார்வ முனைப்பாளர் வினைதீர்த்தான் உணர்த்தினார்.
“நிறைவாகப் பயிலரங்கு அமைந்திருந்தது என்பது மாணவர்கள் எழுதித் தந்த பயிற்சி குறித்த கருத்துப் படிவங்கள் (FEED BACK)மூலம் புலனாகி மனதிற்கு நிறைவு தந்தது” என இப்பயிலரங்கு குறித்து அவர் தெரிவித்தார்.
“பெருநகரங்களில் வசதி படைத்தவர்கள் பெறும் பயிற்சியை இவற்றிற்கான வாய்ப்பில்லாத ஊர்ப்புற மக்களும் பெற்றுப் பயனடைய இப்பயிலரங்கம் உதவியது” என ஆசிரியப் பெருமக்கள் தெரிவித்தனர்.

 

(படங்களைச் சொடுக்கிப் பாருங்கள்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக