கனடியத் தமிழர் பேரவை ஏற்பாட்டில்
தமிழ்க் கனடியருக்காக அமெரிக்கா
நடத்திய கருத்தரங்கு:
அமெரிக்காவில் கல்வி கற்றல், வணிகம், முதலீடு செய்தல், பயணம் –
வேலைக்கான புகுவுச்சீட்டு பெறுதல் தொடர்பாக, கனடாவுக்கான அமெரிக்கத்
தூதரகம் கனடியத் தமிழருக்காய் கருத்தரங்கொன்றை (ஆனி 2045 / சூன் 2014)
நடத்தியது.
கனடியத் தமிழர் வரலாற்றில் முதன்முறையாகக் கனடியத் தமிழர் பேரவையால்
ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய கருத்தரங்கு மிகவும் பயனுள்ள பல தகவல்களை
பங்கேற்றோருக்கு வழங்கியது.
மண்டபம் நிறைந்த பங்கேற்பாளரோடு ‘மார்க்கம் கொண்வென்சன் நடுவத்தில்’
இடம்பெற்ற கருத்தரங்கில் அரசியல் – பொருளாதாரம், வதிவுரிமை அல்லாத
புகுவுப் பிரிவு, பொதுப் பணித்துறை ஆகியவற்றிலிருந்து அமெரிக்கத் தூதரக
அதிகாரிகள் நால்வர் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் உயர் கல்வி கற்றல்,
வணிக முதலீடுகள், அமெரிக்காவுக்கான பல்வேறு வகையான புகுவுச்சீட்டுகள்
தொடர்பாக அவர்கள் விவரங்களை வழங்கினார்கள்.
கருத்தரங்கின் போது பங்கேற்பாளரின் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும்
விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் தூதரக அதிகாரிகள்
பங்கேற்பாளரோடு தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர். இத்தகைய ஒரு
கருத்தரங்கைக் கனடியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்தமை மிகவும் சிறப்பானதும்
பயனுள்ளதும் எனக் கலந்து கொண்ட பலர் கருத்துத் தெரிவித்தனர். மேலதிக
விவரங்கள் அடங்கிய கைப்படிகளை தூதரக அதிகாரிகள் கனடியத் தமிழர் பேரவையிடம்
வழங்கினர்.
இவற்றைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் கனடியத் தமிழர் பேரவையைத் தொடர்பு கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக