வெள்ளி, 3 மே, 2013

மனுநீதிச் சோழனுக்கு மணி மண்டபம்: செயலலிதா அறிவிப்பு

மனுநீதி ச் சோழனுக்கு மணி மண்டபம்:  செயலலிதா அறிவிப்பு
மனுநீதி சோழனுக்கு மணி மண்டபம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, மே 3-

சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்த பதில்கள் வருமாறு:-

உலகநாதன் (இந்திய கம்யூ):- சென்னை ஐகோர்ட்டில் மனு நீதி சோழனுக்கு சிலை இருப்பது போல்திருவாரூர் மண்ணிலும் அவருக்கு மணி மண்டபம் - சிலை வைக்கப்படுமா?

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- உங்களது கோரிக்கை ஏற்கப்படுகிறது. மனு நீதி சோழனுக்கு அவர் பிறந்த மண்ணில் நினைவு மண்டபம் எழுப்பப்படும், கட்டப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கவேல் (இந்திய கம்யூ):- திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியில் சிற்பக்கலை கல்லூரி அமைக்க அரசு ஆவண செய்யுமா?

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- தமிழ்நாட்டில் சிற்பக்கலை அழியக் கூடாது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கமாகும். கொள்கை ஆகும். ஆனால் இன்றைய நவீன உலகில் மாணவர்கள் சிற்பக்கலைகளை கற்க அதிக அளவில் முன் வருவதில்லை இதனால் பிரசித்தி பெற்ற மாமல்லபுரத்தில் உள்ள கல்லூரியிலும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவர்கள் இந்த கலைகளை கற்க ஆர்வத்துடன் முன் வருவதில்லை.

இந்த அரசுக்கு புதிய சிற்பக்கலை கல்லூரியை துவக்குவதில் எந்த சிரமமும் இல்லை உறுப்பினர் சிற்பக் கலைக்கல்லூரி வேண்டும் என்று கேட்கிறார். மாணவர்கள் அதிக அளவில் சேர அவர் உத்தரவாதம் அளித்தால் கல்லூரி துவங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக