திங்கள், 29 ஏப்ரல், 2013

முகநூலில் ஆதரவு திரட்டும் 79 அகவை மும்பைப் பெண்


முகநூலில்  ஆதரவு திரட்டும் 79  அகவை  மும்பை ப் பெண்
மும்பை : தன்னை க் கொடுமைப்படுத்திய போலீஸ் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 79 வயது பெண், "பேஸ்புக்' இணையதளம் மூலம் ஆதரவு திரட்டி வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த மோகினி கம்வானி, 79, என்ற பெண்ணுக்கும், சிலருக்கும் இடையே சொத்து பிரச்னை உள்ளது. அதை தீர்த்து வைக்கக்கோரி அப்பெண், போலீசில் முறையிட்டும், நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால், கடந்த ஆண்டு, மும்பையில் நடந்த குடியரசு தின விழாவில், மோகினி கம்வானி தற்கொலைக்கு முயன்றார்.
அதை அறிந்த போலீசார், அந்தப் பெண்ணை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அதற்கு பின்னரும் வழக்குகளைத் தொடர்ந்து, தொந்தரவு செய்து வருகின்றனர்.

இதனால் விரக்தி அடைந்த அப்பெண், 58 வயதான, தன் மகன் திலீப் என்பவருடன், "பேஸ்புக்' இணையதளத்தின் மூலம் ஆதரவு திரட்டி வருகிறார். அவரின் கோரிக்கைக்கு, 2,400 பேர் பதிலளித்து, ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.அவர்களில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பார்பரா என்பவர் உட்பட ஏராளமானோர் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக