திங்கள், 29 ஏப்ரல், 2013

தொடரிச்சீட்டு, முன்பதிவு புதிய முறை: மே 1 முதல் நடை முறை

தொடரிச்சீட்டு, முன்பதிவு புதிய முறை: மே 1 முதல் நடை முறை

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை 120 நாள்களில் இருந்து 60 நாள்களாக குறைக்கப்பட்டதற்கான புதிய விதிமுறை புதன்கிழமை (மே 1) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
முன்பெல்லாம் ரயில் பயணிகள் 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்கி வந்தது. இப்போது அதனை 2 மாதமாக, அதாவது 60 நாட்களாக குறைத்திருக்கிறது.முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாளாக (பயண நாள் தவிர) குறைக்கப்படுகிறது. இந்த நடைமுறை மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் 30-ம் தேதி வரையிலான முன்பதிவுக்கு பழைய முறையே நீடிக்கும்.
டிக்கெட்டுகளை மொத்தமாக பதுக்கி, பிளாக்கில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையான பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. எனினும், 60 நாள்களைத் தாண்டி முன்பதிவு செய்திருந்த பயணிகள், அவற்றை ரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முன்பதிவு காலம் 360 நாட்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக