சனி, 20 அக்டோபர், 2012

"கடை நடத்தஅதிக விவரம் தேவை!'


சொல்கிறார்கள்

"கடை நடத்தஅதிக விவரம் தேவை!'

 பல ஆயிரக்கணக்கான பெண்களை, தொழிலதிபராக மாற்றிய, டாக்டர்.நடராஜன்: ஒரு கடையை ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில், உங்கள் பகுதி மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தில், என்ன தொழில், எத் தனை பேர் பணி அமர்த் தப்படுவர், எத்தனை மணி நேரம் கடை திறந்திருக்கும், விடுமுறை நாள் போன்ற அடிப்படை விவரங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கும்.விண்ணப்பித்த ஓரிரு நாட்களில், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து, கடைக்கான, "லைசென்ஸ்' கிடைக்கும். பல கடைகளில் இந்த சான்றை, "பிரேம்' செய்து தொங்க விட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒரு கடையை துவங்க, இந்த லைசென்ஸ் போதும். இதை, ஒவ்வொரு வருட மும் புதுப்பிக்க வேண்டும்.அனுமதி பெறாமல் கடை நடத்தும் போது, அபராதம் விதிப்பர்; அனுமதிச் சான்றுக்கான கட்டணத்தை விட, அபராதத் தொகை அதிகம். எனவே, இந்த அடிப்படை நடை முறையை, முன்னரே செய் வது புத்திசாலித்தனம்.தொழில் துவங்க, வங்கிக் கடன் பெற வேண்டும் என்றால், செய்யப் போகும் தொழில், தொழில் நடத்தும் இடம் பற்றிய விவரம், முதலீடு செய்யும் தொகை எவ்வளவு, எதிர்பார்க்கும் லாபம் குறித்த தெளிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.எஸ்.எஸ்.ஐ., அல்லது மாவட்டத் தொழில் மையத்தில் பதிந்து, முறையான சான்றுகளைப் பெற்றிருந்தாலும், இவர் என்ன தொழில் செய்யப் போகிறார், அதில் என்ன அனுபவம் இருக்கிறது, எவ்ளோ லாபம் கிடைக்கும், இந்த நபர், கடனை சரியாகக் கட்டுவாரா போன்ற கேள்விகளுக்கு, சரியான பதிலை, வங்கி மேலாளருக்கு அளிக்க வேண்டும்.அரசு விதிப்படி, தொழில் துவங்க கடன் கேட்டால், 30 நாட்களுக்குள் கடன் கொடுக்க வேண்டும். முடியாவிட்டால், 15 நாட்களில் மனு வை நிராகரித்து, அதற்கான காரணத்தை, வங்கி தெரியபடுத்த வேண்டும். கடனை முறையாக அடைத்து, நல்ல பெயர் வாங்கும் பட்சத்தில், அடுத்தடுத்து கடன் பெறுவது எளிதாகிவிடும்.லோன் வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றும், "புரோக்கர்'கள் அதிகம். அவர்கள் பக்கம் போகவே வேண்டாம். கடன் வாங்கி தொழில் செய்யும் போது, அதற்கான வட்டி, 12 சதவீதம், அசலும், வட்டியுமாய் அடைக்க, அதைத் தாண்டி லாபம் வருமா அல்லது கடன் அடையும் வரை, நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதையும், கணக்குப் போட்டு பார்த்து கடன் வாங்குங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக