வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

உண்ணா நோன்பைக் கைவிட சிவந்தனுக்குக் கருணாநிதி வேண்டுகோள்

உண்ணாவிரதத்தை கைவிட சிவந்தனுக்கு கருணாநிதி வேண்டுகோள்

First Published : 10 Aug 2012 12:58:16 PM IST

Last Updated : 10 Aug 2012 01:05:02 PM IST

சென்னை, ஆக. 10:  அடிப்படை வாழ்வுரிமைகளோ அரசியல் உரிமைகளோ இன்றி வாடும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையை, உலக நாடுகளின் பார்வைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக, லண்டன் மாநகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நாளிலிருந்து, ஈழத் தமிழ் இளைஞர் சிவந்தன் கோபி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், மறு வாழ்விற்காகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இத்தருணத்தில், விலை மதிப்பில்லா உயிரைக் காப்பாற்ற உண்ணாவிரதத்தை கைவிட்டு, வேறு அறவழிகளில் அனைவருடனும் இணைந்து செயல்களில் ஈடுபடுமாறு சிவந்தனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள்

ஹி ஹி ஹி வடிவேல் எல்லாம் இந்த மாதிரி ..காமெடி பண்ணமுடியாது இந்த சிவந்தனை இதுவரை எத்தனையோ ஐரோப்பிய அமெரிக்க செய்தி நிறுவனங்கள் பேட்டி கண்டுள்ளன ...உன்னை யாருக்கு தெரியும் பேடி சிங்களவனுக்கு அறவழி தெரியாது ....அது விளங்கவும் மாடாது ....
By KOOPU
8/10/2012 1:13:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக