சனி, 11 ஆகஸ்ட், 2012

எங்கள் பணிமுறையே தனி!சொல்கிறார்கள்"எங்க பாலிசியே தனி!'டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீமதி: நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம், ஐதராபாத்தில் தான். பள்ளியில் படிக்கும் போது, அங்கு நடக்கும் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்பேன். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இந்தியா முழுவதும் சென்றிருக்கிறேன்; நிறைய பரிசுகள், கோப்பைகள் ஜெயித்திருக்கிறேன். திருமணத்திற்குப் பின், சென்னையில் கணவருடன் குடியேறினேன். வெளி நாடுகள் பலவற்றுக்கும், என் கணவர் அழைத்துச் சென்றார். அந்த அனுபவம் மூலம், "டிராவல் ஏஜன்சி' யை துவங்கலாம் என நினைத்தோம்.என்னிடம் வரும் வாடிக்கையாளர்களை, சுற்றுலா அழைத்துச் செல்லும் அதேவேளை, ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்து, உருவாக்கியது தான், எங்கள் நிறுவனம். வழக்கமான, டிராவல் ஏஜன்சி போன்று, எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் இருக்காது.உதாரணமாக, வெளிநாடுகள் என்றால், நிறைய பேர், சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் என்று தான் செல்ல விரும்புவர். தென் ஆப்ரிக்கா செல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆனால், அங்குள்ள, விக்டோரியா நீர் வீழ்ச்சி அத்தனை அழகு; அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை விட பெரியது. இந்த விஷயம், எத்தனை பேருக்குத் தெரியும்?இது போன்று யாருக்கும் தெரியாத, சிறப்பான இடங்கள் இந்தியாவிலும், உலகம் முழுவதும் எவ்வளவோ உள்ளன. ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்து, சுற்றுலா செல்பவர்கள், குறிப்பிட்ட சில இடங்களை மட்டும் பார்த்து திரும்புவது போலத் தான், பெரும்பாலான, டிராவல் ஏஜன்சிகளின், "டூர் பேக்கேஜ்' இருக்கும். பலருக்கும் அவ்வளவாக தெரியாத இடங்களுக்கு, நாங்கள் அழைத்துப் போவோம்; இது தான் எங்களின் சிறப்பு.புதிதாக என்ன செய்யலாம் என யோசித்து, செயல்படுத்திக் கொண்டே இருப்போம். அப்போது தான், இந்த உலகம் நம்மை உற்று கவனிக்கும்.
1 கருத்து:

  1. வரவேற்கத்தக்க வித்தியாசமான செயல்பாடு. வாழ்த்துகள்.
    - ரியாஸ்,
    பேச: 9677011337

    பதிலளிநீக்கு