செவ்வாய், 8 நவம்பர், 2011

உலகிற்கு தமிழரின் கொடை : உலகின் முதல் ஏவுகணை தொழில் நுட்பம் !

உலகிற்கு தமிழரின் கொடை : உலகின் முதல் இராக்கட் ஏவுகணை தொழில் நுட்பம் !



உங்களால் நம்ப முடியவில்லை, இல்லையா ? ஆம் நூற்றுக்கு நூறு உண்மையே !



 தூத்துக்குடியில் ஆங்கிலேய படைத் தலைவர் கர்னல் ஆக்னு (Col.Agnew ) தனது தலைமைக்கு எழுதிய கடிதத்தில்  தூத்துக்குடி தமிழராகிய  ஜாதி தலைவர் டான் கேப்ரியல் என்ற மீனவகுல தலைவர், மருது சகோதரர்களின் வேண்டுகோளின் படி ராக்கட் ஏவுகணைத் தயாரித்து சோதனை செய்தார் என்றும்  வெடிபொருள் , போர்க்கருவிகளை ஊமைத்துரைக்கு அளித்தார் என்றும்  அவரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று எழுதினர் !

குமுதம்  இதழில் மணிகண்டன் 'தூத்துக்குடி ஜாதித் தலைவர் டான் கேபிரியல் வாஸ் கோமெசு ' பற்றி எழுதிய கட்டுரையில் காணப்பட்ட குறிப்பு :

நன்றி : குமுதம் வார இதழ்

இன்றும் இக்கடிதம் {கர்னல் ஆக்னு (Col.Agnew )} சென்னை எழும்பூரில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ளது !

 
 இந்திய வரலாற்றாளர்களால் (Indian Science Congress )  புறந்தள்ளப்பட்ட வீர மங்கை வேலு நாச்சியார் அவரது தளபதிகள் மருது சகோதரர்களின் வரலாற்றைக்   கூர்ந்து ஆராய்ந்து நோக்கின் இந்த வீரம் விளைந்த மண்ணின் சாதனைகள்  வெளிப்படும் !
 வீரமங்கை வேலுநாச்சியார்

ஜான்சி ராணிக்கு முன்னர் வெள்ளையரை எதிர்த்து நின்று வெற்றி கொண்ட மறவர்குல  வீர மங்கை வேலு நாச்சியார் அவரது தளபதிகள் மருது சகோதரர்களின் விடுதலைப் போரின் வரலாறு இந்திய நடுவண் அரசால் மறைக்கப்பட்ட அவலத்தைப் எடுத்த தலைப்பிற்குள் செல்வதற்கு முன்னால் பதிவு செய்கிறேன் !

மாகடல்  உள்ளிட்ட நிலத் தொன்மை ஆய்வாளர் ஒரிசா சிவ.பால சுப்பிர மணியன் இது போன்ற தகவல் களஞ்சியமாகவும் விளங்குகிறார் ! அவரிடம் அளவளாவிய போது இத்தகவலை வெளியிட்டு என்னை சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர் சிவதாணு பிள்ளை  அவர்களின் :

Vide :Ocean Warfare: The Technology Waves by Dr. A Sivathanu Pillai

 

திப்புசுல்தான் தான் உலகில் முதன் முதலில் சீரங்கப்பட்டின போர்களில் ராக்கெட் ஏவுகணையைப் போராயுதமாக்ப் பயன்படுத்தி ஆங்கிலேயரைத் தோற்கடித்து அழியாப் புகழ் பெற்றான் . இலண்டன் மாநகரில் போர்கருவிகளின் அருங்காட்சியகத்தில் (Royal Artillary Museum Woolwich Arsenel London) திப்புசுல்தானின் இராக்கட் ஏவுகணைகளை பார்வைக்கு இன்றும் வைத்துள்ளார்கள். 

இதில்  என்ன தமிழரின் பங்கு என்ற வினா வந்தால் வியப்பில்லை. மேலே  ஆங்கில தளபதி Col. Agnew  தான் மேலிடத்திற்கு எழுதிய கடிதமே தமிழர்கள் தான் உலகில் முதன் முதலில் ராக்கெட் ஏவுகணை தயாரித்தனர் . சோதனை செய்தும் பார்த்தனர் என்று பதிவு செய்கிறது.

ஐதர் அலி அவர் மகன் திப்பு  சுல்தான் ஆகிய இருவரையும் திண்டுக்கல் கோட்டையில் வீரமங்கை வேலுநாசியாரும், அவர் படைத் தளபதிகள் மருது பாண்டியரும் ஐந்து முறைகள் சந்தித்தனர் என்பது வரலாற்றுப் பதிவு.

 மருது பாண்டியர்

வெள்ளையரை  சிவகங்கைச் சீமையிலிருந்து விரட்ட ஐதரலி  வேலு நாச்சியருக்கு  எல்லா வகையிலும் உதவியதற்கு கைமாறாக மருது பாண்டியர்கள் , தூத்துக்குடி ஜாதித் தலைவர் டான் கேபிரியல்  ( Col. Anew பதிவு செய்தபடி) உதவியுடன் கிடைத்த ராக்கெட் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை  திப்புசுல்தானுக்கு அளித்தனர். 

 திப்பு

இதற்குச் சான்றாக வெடிமருந்து மூலப் பொருள்கள் இன்றும் சிவகங்கையிலும், தூத்துக்குடியிலும் கிடைப்பதும், அதன் காரணத்தால் சிவகாசியில் வெடிகள் செய்யும் தொழிலும், நடுவணரசால் அருகிலுள்ள திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலையும்  அமைந்துள்ளன !

எனவே கீழை நாட்டிலிருந்து, மேல் நாட்டுக்கு  தமிழன் அளித்த முதல் தொழில்நுட்பம் ராக்கெட் ஏவுகணைத் தொழில் நுட்பமே என நிறுவ முடிகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக