வெள்ளி, 1 அக்டோபர், 2010

தலையங்கம்: அரசியல்தனமான தீர்ப்பு!


ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது. நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!
கருத்துக்கள்

எதிர்பார்க்கவில்லை, தினமணி நல்ல எடுத்துக்காட்டுடன் நடுநிலைமையுடன் கருத்தை வெளியிடும் என்று.ஆனால் நடைமுறை நிலைமை அதுதானே! உரிமையாளனும் களவாளியும் சொந்தம் கொண்டாடும் பொழுது உண்மையின் பக்கம் இருப்பது நடுநிலைமை என்று இல்லாமல் இருவருக்கும் சமமாகப் பிரித்து அநீதி வழங்குவதுதானே நம் நாட்டு நடுநிலைமை! திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு, கோலார், மைசூர், சித்தூர் முதலான தமிழர் நகரங்கள் யாவும் கள்ளத்தனமாகக் கவர எண்ணிய பிற மாநிலங்களில் சேர்க்கப்பட்ட வன்முறை நீதிதானே நம் நாட்டில் நடைபெற்றது.தமக்குரிய இடத்தில் மூன்றில் இரு பங்கை அடுத்தவர்க்கு வழங்கும் நீதி முறையற்றது என இரு தரப்பு முறையிட வாய்ப்பு உள்ளதே! எப்படியோ! மேல் முறை யீட்டில் இரு நூற்றாண்டுகள் செல்லட்டும்! அதற்குள் காலமே அந்த இடத்தை இல்லாதாக்கிவிடும் என்று நீதி வழங்கியோரின் நம்பிக்கை இருந்திருக்கலாம். எதற்கும் நீதிபதிகளின் சொத்துகளில் பங்கு கேட்டு வழக்கு தொடுத்து வைப்போம். என்றேனும் ஒரு நாள் வழக்கு நடத்துவதன்அடிப்படையில் நம் வழிமுறையினருக்கு அச் சொத்துகளில் பங்கு கிடைக்கும் அல்லவா! 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/1/2010 4:28:00 AM
WHO IS THE ORIGINAL OWNER OF THIS DISPUTED LAND ?A HINDU OR A MUSLIM? ONLY ON THIS BASIS WE EXPECT THE JUDGEMENT .HOW MANY YEARS WASTED FOR THIS ?STILL NO SATISFACTION TO MUSLIMS;AN APPEAL IS READY FROM THEM;;;NATURAL CALAMITIES ARE GOING TO DESTROY THE WORLD SOON;;SO DON'T WORRY...NO COURT OR JUDGE WILL DECIDE THIS ONE.
By rangaraj
10/1/2010 4:28:00 AM
பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா? வினவு.காம்
By ஏழர
10/1/2010 4:25:00 AM
1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா? vinavu.com
By ஏழர
10/1/2010 4:23:00 AM
we did't expect this judgement. as you said, it is truly given to the favor of government. but one thing,now it is not look dangerous. if all the 3 parties plan to build their temple in that place, then we will face some different type of problems. so the government must undertake that place to utilize for some other public purpose, when the parties does't have the proper and satisfied evidence. can we expect that courage from the government. the judicial also should do this.
By S.Devarajan, Trichy.
10/1/2010 4:13:00 AM
பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது. எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும். ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள். நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
By நீதியரசன்
10/1/2010 4:13:00 AM
சரியான தலையங்கம். தினமணிக்கு இருக்கும் தெளிவான ஞானம் கூட மெத்தப்படித்த நீதியரசர்களுக்கு இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவர்களிடமா இனி நீதி கிடைக்கும். கட்டப்பஞ்சாயத்து கூடாரமாகிவிட்ட இந்திய நீதிமன்றங்கள். இனி எங்கள் பிரச்சினைக்கு எங்கள் ஊர் தாதாவிடமே சென்று எங்களுக்குள் சமரசம் செய்துகொள்வோம். தேவையில்லர்மல் நேரத்தையும் இந்தியாவின் கஜானாவையும் கூடவே மானத்தையும் காலிபண்ணிய இந்த நீதியரசர்களை கண்டு உலகமே வியக்கிறது. (மேல் முறையீடு செய்தால்) நீதியை காப்பாற்ற, இழந்துவிட்ட இந்தியாவின் கவுரவத்தை இனி சுப்ரீம் கோர்ட்டாவது காப்பாற்றுமா?
By மானமுள்ள இந்தியன்
10/1/2010 4:07:00 AM
what best judgement we are all expecting other than this? We need to have some kind of compromised judgement only, NO other choice in this long pending sensitive case. You need to give value to majority/minority community religious values and sentiments otherwise this will go on for ever. I feel this is best opportunity for entire Hindus and Muslims to close this issue instead of prolonging this. We need both RAMA and ALLA. THIS WILL BECOME WORLD INTEGRATED MONUMENT FOR HINDU MUSLIM FOR ENTIRE WORLD/INDIA and FUTURE GENERATION too.
By VIJAY
10/1/2010 4:04:00 AM
விடுங்க சார், 2 பேறும் சந்தோசமா அமைதியா இருந்தா சரி.
By Guna
10/1/2010 4:03:00 AM
தினமணி கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. நீதித்துறையில் காங்கிரஸ் காரன் உட்புகுந்து ஆண்டுகள் பல ஆகி விட்டன. புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த குண்டர்கள் அங்கேயே ஒரு பகுதுயில் வசிக்க வழி செய்வது போல கோவில் இடிக்கப்பட்டாலும் மசூதி அதன் மீது கட்டப்பட்டதால் அவர்களுக்கும் பங்கு அளிக்கப்பட்டுள்ளது!
By Solomon
10/1/2010 3:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *




கருத்துக்கள்

திரு சேகர் அவர்களே! thiru2050.blogspot.com பாருங்கள். தலைப்பில் கணிணியில் தமிழ்த் தட்டச்சு என்று இருக்கும். சொடுக்கி விவரம் அறியுங்கள். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/1/2010 9:35:00 AM
மீள்பதிவு : எதிர்பார்க்கவில்லை, தினமணி நல்ல எடுத்துக்காட்டுடன் நடுநிலைமையுடன் கருத்தை வெளியிடும் என்று.ஆனால் நடைமுறை நிலைமை அதுதானே! உரிமையாளனும் களவாளியும் சொந்தம் கொண்டாடும் பொழுது உண்மையின் பக்கம் இருப்பது நடுநிலைமை என்று இல்லாமல் இருவருக்கும் சமமாகப் பிரித்து அநீதி வழங்குவதுதானே நம் நாட்டு நடுநிலைமை! திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு, கோலார், மைசூர், சித்தூர் முதலான தமிழர் நகரங்கள் யாவும் கள்ளத்தனமாகக் கவர எண்ணிய பிற மாநிலங்களில் சேர்க்கப்பட்ட வன்முறை நீதிதானே நம் நாட்டில் நடைபெற்றது.தமக்குரிய இடத்தில் மூன்றில் இரு பங்கை அடுத்தவர்க்கு வழங்கும் நீதி முறையற்றது என இரு தரப்பு முறையிட வாய்ப்பு உள்ளதே! எப்படியோ! மேல் முறை யீட்டில் இரு நூற்றாண்டுகள் செல்லட்டும்! அதற்குள் காலமே அந்த இடத்தை இல்லாதாக்கிவிடும் என்று நீதி வழங்கியோரின் நம்பிக்கை இருந்திருக்கலாம். எதற்கும் நீதிபதிகளின் சொத்துகளில் பங்கு கேட்டு வழக்கு தொடுத்து வைப்போம். என்றேனும் ஒரு நாள் வழக்கு நடத்துவதன்அடிப்படையில் நம் வழிமுறையினருக்கு அச் சொத்துகளில் பங்கு கிடைக்கும் அல்லவா! அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thi
By Ilakkuvanar Thiruvalluvan
10/1/2010 9:33:00 AM
ITS NOT A LOGICAL JUDGEMENT.DINAMANI REFLECTS THE FACT OF JUSTICE EXACTLY.
By RAVICHANDRAN.M
10/1/2010 9:23:00 AM
Really true.....
By c.a.sathiya moorthy ,pondy
10/1/2010 8:52:00 AM
வாசகர் திரு சேகர் அவர்களே தங்களது மெயில் id அடுத்த கடிதத்தில் தெரிவியுங்கள். தமிழில் எப்படி டைப் செய்வது என்பதை தெரியப்படுத்துகிறேன் . தினமணி வாசகன் அக்கினிக்குஞ்சு
By akkinikkunju dindigul
10/1/2010 8:27:00 AM
Excellent & UNbaised Editorial.
By Boodhi Dharma
10/1/2010 8:01:00 AM
TOTALLY HALF BAKED MATERIAL. THERE WOULD BE NO JUDGEMENT BETTER THAN THIS. IF THE JUDGEMENT WAS FAVOUR OF ANY ONE DEFINETELY PROBLEM MAY BE RAISEDIN ALL OVER THE INDIA. IF SO THEN WHAT WILL BE THE DINAMANI'S VIEW?
By DEVARAJAN
10/1/2010 7:59:00 AM
அருமையான தலையங்கம்!நான் முன்பே சொன்னது போல இந்த தீர்ப்பு அரசாங்கம் எதிர்பார்த்தது போல ஒரு அமைதியின்மையை நிச்சயம் இங்கு எற்படுத்தாது
By வல்லம் தமிழ்
10/1/2010 7:55:00 AM
நல்ல தீர்ப்பு.
By கிரி ..அனகை ..
10/1/2010 7:39:00 AM
வாழ்க தினமணி! நேற்று இது வரை பாபர் மசூதி என்று வரலாறு எழுதும்போது மிக முக்கியமான 1992 டிசம்பர் 6 ஐ மறைத்து எழுதியதற்கு பரிகாரமாக அருமையான தலையங்கம். சாலமன் என்ற அரசரிடம் ஒரு குழந்தைக்கு 2 பெண்கள் உரிமை கொண்டாடினர்.சாலமன் உண்மையான தாய் யார் என்பதைக்கண்டுபிடித்து தீர்ப்பு வழங்கினார். நமது அலகாபாத் நீதிபதிகள் கலியுக சாலமன்கள்.எனவே குழ ந்தையை 3 ஆக வெட்டி தந்து விட்டனர். நிலத்தின் மீதான தனி நபர் உரிமைகள் ஆங்கிலேயர்கள் கொண்டுவ ந்த சட்டம்.அதற்கு முன்பு நிலம் என்பது பொதுவானது.அதாவது அரசுக்குச்சொ ந்தம்.எனவே நிலம் முழுவதையும் மத்தியரசு எடுத்துக்கொண்டு அங்கு மாபெரும் பல்கலைக்கழகமோ, நூலகமோ,அறிவியல் பூங்காவோ அமைக்கவேண்டும். நீதிபதிகளின் தீர்ப்பு, மதுராவிற்கும், காசிக்கும் தூபம் போட்டுவிட்டது. ஆ.ஈசுவரன்/திருப்பூர்.
By a.eswaran
10/1/2010 7:33:00 AM
you are exactely correct.no difference between this verdict and village katta panjayathu.for this verdict, 60 years waste.(three generation)
By bparani
10/1/2010 7:33:00 AM
மிகச்சரியான தலையங்கம்.உணர்ச்சி பூர்வமான பிரச்னைக்கு தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து மூலம் போல் தான் தீர்ப்பு வழங்கமுடியும் என்பதை அலகாபாத் நீதிமன்றம் நிரூபித்துள்ளது.சட்டம் இதில் கையாளப்படாத கையாலாகாத்தனத்தை குடிமக்களுக்கு நீதிமன்றம் உணர்த்தியுள்ளது.இந்த ஆண்டின் மிகச் சிறந்த தலையங்கம் இதுவென்பது என் கருத்து.வாழ்த்துக்கள் தினமணிக்கு!
By ஆரிசன்
10/1/2010 7:12:00 AM
எல்லா மீடியாக்களும் 'சமரச' பல்லவி பாடும்போது, உண்மையை உள்ளவாறு எழுதிய தினமணி எழுதியுள்ளது பாராட்டத் தக்கது. வளர்க உங்கள் பனி. மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால், எந்தத் தரப்பும் உணர்ச்சிவசப்பட தேவை இல்லை.
By Sukumaran
10/1/2010 6:47:00 AM
சரியா சொன்னீங்க. நாளைக்கு நானும் அந்த இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்தை அணுகப் போறேன். எனக்கும் ஒரு பங்கு கிடைக்குமுல்ல!
By Mathivanan
10/1/2010 6:41:00 AM
One way it is a good compromise judgment to avoid unwanted bloodshed in India. Law can't keep harmony only human attitude and friendly with all people create peace and harmony. Let both RAMA and ALLAH blesh together to all community & both will help to make an end this religious argument and fightings.
By ravi , brunei
10/1/2010 6:41:00 AM
மிக அருமையான தலையங்கம். என்னைபோன்ற நடுநிலையாளர்கள் மனதில் தோன்றிய அத்தனையையும் தலையங்கம் பிரதிபலிக்கிறது. முக்கியமாக கட்டபஞ்சாயத்து, தீர்ப்பு சாட்சிகளின் அடிப்படையில் இருக்கவேண்டுமே அன்றி மத நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல என்பது. "நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை. யார்க்கும் அஞ்சா நெறிகள்" என்பதை நிருபித்து விட்டீர்கள். முதுகெலும்புள்ள ஒரே பத்திரிக்கை தினமணி மட்டும்தான்.
By Venkat
10/1/2010 6:35:00 AM
How did the judges say Lord Ram born in the disputed site? Did they have evidence? Did they have any birth certificate? This is highly idiotic?
By Nisha
10/1/2010 6:15:00 AM
Excellent editorial. Court should not declare verdict based on faith but based on evidence only. Court is not here to give political solution.
By Kumar
10/1/2010 6:11:00 AM
View of Editor is itself a Judgememt about the judgement. Vazhga Polititions, Vazhga Judgement (Panjayat), Vazhga so called leaders of religions. Jai Hind, Vande Madharam. Vazhga Mani Thiru Nadu. B. Sekaran. A Reader since 1967. (How to type in tamil. pl help me out)
By B. SEKARAN
10/1/2010 6:01:00 AM
தினமணி இன் இன்றைய தலையங்கம் மிகவும் அருமை. இருபினும் தர்மம் வென்றது.கோவிலின் மீதுதான் அந்த கட்டடம் கட்டப்பட்டது என்பதை மூன்று நீதிபதிகளும் தெளிவாக கூறிவிட்டனர். தீவிரவாதத்தின் பிறப்பிடம் எது என்பதை இதன் மூலம் அறியலாம். ராமர் அங்கு தான் பிறந்தார் என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.எனவே சில அந்நிய கைக்கூலிகளின் சதிகளை முறியடித்து நாமெல்லாம் பாரத தாயின் குழந்தைகள் என்பதை உணர்ந்து ஒன்றுபடுவோம். உலகின் குருவாய் பாரதம் ஆகிட உன்னத சக்தி வளர்ப்போம் . வந்தே மாதரம்.
By வீர ஹிந்து முத்துபேட்டை
10/1/2010 5:48:00 AM
I am also thinking of filing a Title Suit with a right of claim over the vacant Government Lands so that in the years to come my progeny will get at least one third of a share on the basis of the Judgement in the above issue.
By SREEDHARAN
10/1/2010 5:25:00 AM
மறைமுகமாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் , ராமர் கோவில் அயோத்தியில் இருந்தது என்பதை தெளிவாக்கிய நீதிபதிகளுக்கு பாராட்டுதல்கள். நிர்பந்தங்களுக்கு ஆளாகாமல் , கோவில் தான் முதலில் இருந்தது அதை இடித்து விட்டோ அல்லது இடிந்து கிடந்த இடத்திலோ தான் மசூதி ஏற்படுத்தப்பட்டது என்பதை தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். இந்தத் தீர்ப்பே போதுமானது. இனி இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு ராமர் கோவில் அமைத்தே தீருவோம் என வெற்றுக் கோஷங்களை எழுப்பி இந்துக்களின் ஓட்டுக்களைப் பெரும் முயற்சிகளில் பாஜகவும் , உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறும் வரை எந்த நடவடிக்கையும் கூடாது எனக் கூறி இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெறுவதில் காங்கிரசும் தீவிரமாக ஈடுபடும். மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் லாபம் காண்பதற்கு இரண்டு பிரிவினரும் தயாராகி விடுவார்கள். ராமர் கோவிலைப் பற்றியும் , மசூதியைப் பற்றியும், மக்களின் நல்லிணக்கம் குறித்தும் யாருக்கு அக்கறை இருக்கப் போகிறது.
By akkinikkunju dindigul
10/1/2010 5:19:00 AM
then, How many people you want die again?
By venkat - Aus
10/1/2010 5:18:00 AM
then, How many people you want die again?
By venkat - Aus
10/1/2010 5:18:00 AM
sariyaka sonnirgal ungalin katturai manathukku aaruthal alikkerathu
By bakruthin
10/1/2010 5:11:00 AM
Judges are also becoming like politcians. No wonder. There is proverb. DEEPASATHAMPAM MAHA ISERAYAM! IYENNIKUM KITTANAM PANNAM. Meaning is The Kotimaram is wonderfull! But I too wants money!
By Narayanan
10/1/2010 5:09:00 AM
இந்தத் தலையங்கம் வரலாற்றின் பக்கங்களின் பொறிக்கப்படும் . நாங்கள் சொல்ல நினைத்த அத்தனையையும் சொல்லி விட்டது. பிற இதழ்கள் செய்திகளின் வழியே தலையங்கங்களை (பெரும்பாலும் ஒருபக்கச் சார்பானவை) தினமணி தன் பெருமைகளைத் தக்கவைத்துக் கொண்டுவிட்டது. தொடரட்டும் இந்தப்பீடு நடை.
By boobathi
10/1/2010 5:05:00 AM
WHO IS THE ORIGINAL OWNER OF THIS DISPUTED LAND ?A HINDU OR A MUSLIM? ONLY ON THIS BASIS WE EXPECT THE JUDGEMENT .HOW MANY YEARS WASTED FOR THIS ?STILL NO SATISFACTION TO MUSLIMS;AN APPEAL IS READY FROM THEM;;;NATURAL CALAMITIES ARE GOING TO DESTROY THE WORLD SOON;;SO DON'T WORRY...NO COURT OR JUDGE WILL DECIDE THIS ONE.
By rangaraj
10/1/2010 4:28:00 AM
பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா? வினவு.காம்
By ஏழர
10/1/2010 4:25:00 AM
we did't expect this judgement. as you said, it is truly given to the favor of government. but one thing,now it is not look dangerous. if all the 3 parties plan to build their temple in that place, then we will face some different type of problems. so the government must undertake that place to utilize for some other public purpose, when the parties does't have the proper and satisfied evidence. can we expect that courage from the government. the judicial also should do this.
By S.Devarajan, Trichy.
10/1/2010 4:13:00 AM
what best judgement we are all expecting other than this? We need to have some kind of compromised judgement only, NO other choice in this long pending sensitive case. You need to give value to majority/minority community religious values and sentiments otherwise this will go on for ever. I feel this is best opportunity for entire Hindus and Muslims to close this issue instead of prolonging this. We need both RAMA and ALLA. THIS WILL BECOME WORLD INTEGRATED MONUMENT FOR HINDU MUSLIM FOR ENTIRE WORLD/INDIA and FUTURE GENERATION too.
By VIJAY
10/1/2010 4:04:00 AM
விடுங்க சார், 2 பேறும் சந்தோசமா அமைதியா இருந்தா சரி.
By Guna
10/1/2010 4:03:00 AM
தினமணி கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. நீதித்துறையில் காங்கிரஸ் காரன் உட்புகுந்து ஆண்டுகள் பல ஆகி விட்டன. புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த குண்டர்கள் அங்கேயே ஒரு பகுதுயில் வசிக்க வழி செய்வது போல கோவில் இடிக்கப்பட்டாலும் மசூதி அதன் மீது கட்டப்பட்டதால் அவர்களுக்கும் பங்கு அளிக்கப்பட்டுள்ளது!
By Solomon
10/1/2010 3:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து:

  1. மீண்டும் மீள்பதிவு : முதல்வர் தெரிவித்த கருத்து மாதிரி இல்லையே!வழக்கு என்றால் மேல் முறையீடும் இருக்கத்தான் செய்யும்.அப்புறம் என்ன மேல்முறையீடு செய்யவும் வழி வகுத்திருப்பது வரவேற்கத் தக்கது எனப் புதுமைபோல் கூற்று. முத் தரப்பு இருக்கும் பொழுது இரு தரப்பினர் மட்டும் நிறைவடைவர் என்பதும் சரியல்ல. சொந்தமில்லாதவர்கள் சொத்து வேண்டி வழக்கு தொடுத்து அதில் பங்கு கிடைத்தால் மகிழத்தான் செய்வார்கள். ஏதோ மத்திய அரசை மகிழ்விக்கும் எனக் கருதி யாரோ தெரிவித்த கரு்த்தாக உள்ளது. முழுமையும் படித்துப் பார்க்காமல் அவர் எதையும் சொல்ல மாட்டார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (கண்ட கண்ட நரகல் நடையை யெல்லாம் அப்படியே வெளியிடும் தினமணி, கலைஞரைத்தாக்கி விட்டதாக எண்ணி இதை எடுக்க வேண்டா.என வேண்டியும் எடுத்துள்ளீர்களே!
    By Ilakkuvanar Thiruvalluvan
    10/1/2010 2:57:00 PM

    பதிலளிநீக்கு