அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர் ஹரித்துவாரில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடத்திய இந்து, முஸ்லிம் மதத் தலைவர்கள்.
லக்னெள,செப்.30: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை மூன்று சமபாகங்களாகப் பிரித்து ஹிந்து மகா சபை, நிர்மோஹி அகாடா, சுன்னி வக்ஃப் வாரியம் ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும், குழந்தை வடிவில் ராமர் சிலை இருக்கும் இப்போதைய வழிபாட்டிடம் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும்; இன்னும் 3 மாதங்களுக்கு இப்போதுள்ள நிலையிலேயே இந்த இடம் பராமரிக்கப்பட வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.ராமர் பிறந்த இடம் என்று ஹிந்துக்களால் வழிபடப்படும் ஜென்ம பூமி, பாபர் கட்டிய மசூதி என்று முஸ்லிம்களால் அழைக்கப்படும் வழிபாட்டிடம் ஆகியவை தொடர்பான சுமார் 60 ஆண்டு காலத்துக்கும் மேற்பட்ட இந்த வழக்கில் மிகுந்த பரபரப்புக்கு இடையே மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது.யார் யாருக்கு இடம்?: ஸ்ரீ ராமர் குழந்தை வடிவில் அமர்ந்த நிலையில் (ராம் லல்லா விராஜ்) சிலையாக வைத்து வழிபடப்படும் மத்திய பகுதி ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.சீதா ரஸோய் (சமையல் கூடம்), ராம் சபூத்ரா (யாக வேதிகை), பண்டார் ஆகிய பகுதிகள் நிர்மோஹி அகாடா என்ற வைணவ அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.எஞ்சிய மூன்றில் ஒரு பகுதி சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகளின் தீர்ப்பு கூறுகிறது.3 மாதங்களுக்கு இதே நிலைமை: சர்ச்சைக்குரிய இடத்தில் இப்போதுள்ள அமைப்பு இன்னும் 3 மாதங்களுக்கு அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு அறிவுறுத்துகிறது. நீதிபதி தரம்வீர் சர்மா: சர்ச்சைக்குரியதாக்கப்பட்ட இந்த இடம் முழுவதுமே ஸ்ரீ ராமர் பிறந்த இடம் என்று வழிவழியாக ஹிந்துக்களால் நம்பப்படுகிறது. இந்த இடம் முழுக்க ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பிற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதியை கட்டக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு விரோதமாக இந்த இடத்தில் பாபர் மசூதியைக் கட்டியிருப்பதால் இது மசூதிக்குரிய இலக்கணங்களோடு இல்லை.நீதிபதி எஸ்.யூ. கான்: ஹிந்து மகாசபை, நிர்மோஹி அகாடா, சுன்னி வக்ஃப் வாரியம் ஆகிய மூன்றுமே இந்த இடத்தைக் கூட்டாக பல ஆண்டுகளாக அனுபவித்து வந்திருப்பதற்கு ஆதாரம் இருப்பதால் இவை மூன்றுமே இந்த இடத்துக்கு கூட்டு உரிமையாளர்கள். எனவே மூன்று தரப்பினரும் தங்களுடைய வழிபாடுகளைத் தொடர இந்த இடத்தைச் சமமாகப் பிரித்து ஆளுக்கொரு பகுதியை வழங்கலாம். இதற்கான ஆணை இந்தத் தீர்ப்பில் இடம் பெறுகிறது.சர்ச்சைக்குரிய கட்டடத்தின் நடுப்பகுதியில் உள்ள கோபுர அமைப்புக்குக் கீழே ராமர் சிலை வைத்து வழிபடப்படுகிறது. அந்த இடம் ஹிந்துக்களுக்கு வழங்கப்படுகிறது. சீதா ரஸோய், ராம் சபூத்ரா என்ற பகுதிகள் நிர்மோஹி அகாடாவுக்கு தரப்பட வேண்டும்.இதில் யாருக்காவது கட்டுமானத்துக்குக் கூடுதல் இடம் தேவைப்பட்டால் மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள பக்கத்து நிலத்திலிருந்து தரப்பட வேண்டும்.சர்ச்சைக்குரிய இடத்தை பாபரோ அவரது ஆணைப்படி வேறு யாரோ மசூதியைக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கான நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லை.இந்த மசூதியைக் கட்டுவதற்காக கோயிலை இடித்ததற்கான ஆதாரங்களும் இல்லை. அதே சமயம் கோயிலின் இடிபாடுகள் மீது மசூதி கட்டப்பட்டிருப்பதை தொல்லியல்துறை அளித்த ஆதாரங்களிலிருந்து அறிய முடிகிறது.நீதிபதி அகர்வால்: 3 கோபுரம் போன்ற அமைப்புள்ள இந்த கட்டடத்தின் நடு கோபுரத்துக்குக் கீழே உள்ள இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று வாதிகள் கூறுகின்றனர். இதற்கு காலம்காலமாக ஹிந்துக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் ஆதாரம்.அதே சமயம் பல நூற்றாண்டுகளாக இந்த இடத்தை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே ராமர் சிலை வைத்து வழிபடப்படும் இடம் ஹிந்துக்களுக்கும் சீதா ரஸோய், ராம் சபூத்ரா, பண்டார் பகுதிகள் நிர்மோஹி அகாடாவுக்கும், எஞ்சிய பகுதிகள் முஸ்லிம்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்பட வேண்டும்.கி.பி. 1528-ல் பாபர்தான் இந்த மசூதியைக் கட்டினார் என்பதை நிரூபிக்க முஸ்லிம் தரப்பு தவறிவிட்டது.தேவேந்திர உபாத்யாய: உத்தரப் பிரதேச அரசு சார்பில் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக உதவிகளைச் செய்த தேவேந்திர உபாத்யாய தீர்ப்பின் சாரத்தை நிருபர்களிடம் வெளியிட்டு விளக்கம் அளித்தார். நிலத்தை எப்படி பங்கீடு செய்யலாம் என்பதை இதில் சம்பந்தப்பட்டுள்ள 3 தரப்பும் ஆலோசனை தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர் என்றார்.நிர்மோஹி அகாடா: நிர்மோஹி அகாடா என்பது அகில பாரத அகாடா பரிஷத் என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வைணவ அமைப்பாகும். இதன் தலைவர் மகந்த் பாஸ்கர தாஸ்.ராம் சபூத்ரா என்று அழைக்கப்படும் இடத்தில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று பைசாபாத் சார்பு நீதிபதியிடம் இந்த அமைப்பினர் 1885 ஜனவரி மாதமே வழக்கு தாக்கல் செய்தனர்.பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் 1959 முதலே இந்த அமைப்பினர் தொடர்ந்து மனு தாக்கல் செய்து உரிமை கோரி வருகின்றனர்.ராமர் சிலையை காலகாலமாக இதே இடத்தில் வழிபட்டு வருவதால் ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று 1989-ல் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.இவ்வாறு ராமர் கோயிலில் தொடர்ந்து சேவை செய்து வந்ததுடன் வழக்குகளிலும் தீவிரப் பங்கு எடுத்து உரிமை கோரி வந்தனர். எனவே இவர்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு நிலம் தரப்படுகிறது.
கருத்துக்கள்

அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/1/2010 4:30:00 AM
10/1/2010 4:30:00 AM


By mohammed
10/1/2010 4:08:00 AM
10/1/2010 4:08:00 AM


By கட்ட பஞ்சாயத்து
10/1/2010 4:04:00 AM
10/1/2010 4:04:00 AM


By vt
10/1/2010 3:44:00 AM
10/1/2010 3:44:00 AM


By Dillu Durai
10/1/2010 3:31:00 AM
10/1/2010 3:31:00 AM


By Srini m
10/1/2010 3:28:00 AM
10/1/2010 3:28:00 AM


By Dillu Durai
10/1/2010 3:11:00 AM
10/1/2010 3:11:00 AM


By in
10/1/2010 3:03:00 AM
10/1/2010 3:03:00 AM


By in
10/1/2010 3:02:00 AM
10/1/2010 3:02:00 AM


By இராஜேசுவரன்
10/1/2010 2:59:00 AM
10/1/2010 2:59:00 AM


By Syed Abid Panruti
10/1/2010 2:57:00 AM
10/1/2010 2:57:00 AM


By இராஜேசுவரன்
10/1/2010 2:57:00 AM
10/1/2010 2:57:00 AM


By Dillu Durai
10/1/2010 2:47:00 AM
10/1/2010 2:47:00 AM


By prathip naidu
10/1/2010 2:39:00 AM
10/1/2010 2:39:00 AM


By Fowsul Ameen
10/1/2010 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/1/2010 2:34:00 AM
மீள்பதிவு : உரிமையாளனும் களவாளியும் சொந்தம் கொண்டாடும் பொழுது உண்மையின் பக்கம் இருப்பது நடுநிலைமை என்று இல்லாமல் இருவருக்கும் சமமாகப் பிரித்து அநீதி வழங்குவதுதானே நம் நாட்டு நடுநிலைமை! திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு, கோலார், மைசூர், சித்தூர் முதலான தமிழர் நகரங்கள் யாவும் கள்ளத்தனமாகக் கவர எண்ணிய பிற மாநிலங்களில் சேர்க்கப்பட்ட வன்முறை நீதிதானே நம் நாட்டில் நடைபெற்றது.தமக்குரிய இடத்தில் மூன்றில் இரு பங்கை அடுத்தவர்க்கு வழங்கும் நீதி முறையற்றது என இரு தரப்பு முறையிட வாய்ப்பு உள்ளதே! எப்படியோ! மேல் முறை யீட்டில் இரு நூற்றாண்டுகள் செல்லட்டும்! அதற்குள் காலமே அந்த இடத்தை இல்லாதாக்கிவிடும் என்று நீதி வழங்கியோரின் நம்பிக்கை இருந்திருக்கலாம். எதற்கும் நீதிபதிகளின் சொத்துகளில் பங்கு கேட்டு வழக்கு தொடுத்து வைப்போம். என்றேனும் ஒரு நாள் வழக்கு நடத்துவதன்அடிப்படையில் நம் வழிமுறையினருக்கு அச் சொத்துகளில் பங்கு கிடைக்கும் அல்லவா! அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/1/2010 4:30:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
10/1/2010 9:40:00 AM
10/1/2010 9:40:00 AM


By karate j selva
10/1/2010 9:29:00 AM
10/1/2010 9:29:00 AM


By MANI
10/1/2010 9:27:00 AM
10/1/2010 9:27:00 AM


By Aravi
10/1/2010 9:15:00 AM
10/1/2010 9:15:00 AM


By v.lalithakumar
10/1/2010 9:04:00 AM
10/1/2010 9:04:00 AM


By vellamuthu
10/1/2010 8:57:00 AM
10/1/2010 8:57:00 AM


By ajanth
10/1/2010 8:32:00 AM
10/1/2010 8:32:00 AM


By வீர ஹிந்து முத்துபேட்டை
10/1/2010 5:29:00 AM
10/1/2010 5:29:00 AM


By mohammed
10/1/2010 4:32:00 AM
10/1/2010 4:32:00 AM


By vt
10/1/2010 3:44:00 AM
10/1/2010 3:44:00 AM


By Dillu Durai
10/1/2010 3:31:00 AM
10/1/2010 3:31:00 AM


By Srini m
10/1/2010 3:28:00 AM
10/1/2010 3:28:00 AM


By இராஜேசுவரன்
10/1/2010 2:59:00 AM
10/1/2010 2:59:00 AM


By Syed Abid Panruti
10/1/2010 2:57:00 AM
10/1/2010 2:57:00 AM


By Dillu Durai
10/1/2010 2:47:00 AM
10/1/2010 2:47:00 AM


By prathip naidu
10/1/2010 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/1/2010 2:39:00 AM
meendum மீள்பதிவு : உரிமையாளனும் களவாளியும் சொந்தம் கொண்டாடும் பொழுது உண்மையின் பக்கம் இருப்பது நடுநிலைமை என்று இல்லாமல் இருவருக்கும் சமமாகப் பிரித்து அநீதி வழங்குவதுதானே நம் நாட்டு நடுநிலைமை! திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு, கோலார், மைசூர், சித்தூர் முதலான தமிழர் நகரங்கள் யாவும் கள்ளத்தனமாகக் கவர எண்ணிய பிற மாநிலங்களில் சேர்க்கப்பட்ட வன்முறை நீதிதானே நம் நாட்டில் நடைபெற்றது.தமக்குரிய இடத்தில் மூன்றில் இரு பங்கை அடுத்தவர்க்கு வழங்கும் நீதி முறையற்றது என இரு தரப்பு முறையிட வாய்ப்பு உள்ளதே! எப்படியோ! மேல் முறை யீட்டில் இரு நூற்றாண்டுகள் செல்லட்டும்! அதற்குள் காலமே அந்த இடத்தை இல்லாதாக்கிவிடும் என்று நீதி வழங்கியோரின் நம்பிக்கை இருந்திருக்கலாம். எதற்கும் நீதிபதிகளின் சொத்துகளில் பங்கு கேட்டு வழக்கு தொடுத்து வைப்போம். என்றேனும் ஒரு நாள் வழக்கு நடத்துவதன்அடிப்படையில் நம் வழிமுறையினருக்கு அச் சொத்துகளில் பங்கு கிடைக்கும் அல்லவா! அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் 10/1/2010 4:30:00 AM 10/1/2010 9:40:00 AM
பதிலளிநீக்கு