First Published : 03 Jul 2010 12:25:00 AM IST
சென்னை, ஜூலை 2: இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையிலேயே பாடுபடுபவர்கள் தம்மை உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை சட்டப் பேரவை வலியுறுத்தியது.மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை மறந்துவிட முடியுமா?இலங்கையில் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச் சங்கிலிகளும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.அப்போது அறிக்கை விடுத்த ஜெயலலிதா, ""ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தமிழர்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.இதேபோன்று, இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.ஆனால், 2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்
இரண்டு தலைவர்களின் கருத்துகளையும் ஏற்போம்! எனவே, இருவரும் இன்றைக்கு இனப்படுகொலையைத தடுக்கும் எண்ணத்தில் இல்லை என்பது உறுதியாகிறது. கட்சிக் கொத்தடிமையில் இருந்து தமிழக மக்கள் மீண்டழுந்து விழித்துணர்ந்து இன நலன் பேணுவார்களாக! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-பன்னாட்டு உறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/3/2010 4:24:00 AM
7/3/2010 4:24:00 AM
dei molla maari innumuma intha oor unna nambhuthu?
By navin guru
7/3/2010 4:01:00 AM
7/3/2010 4:01:00 AM
துரோகி துரோகி கருணாநிதி துரோகி 1) பிரபாகரனை விசாரணைக்கி ஒப்படைக்க செல்வது சரி.மருத்துவத்துக்குவந்த தாயவே துரத்தியடித்த துரோகி.த.வி.பு.இந்.நுளை விடகூடாது?.இன்று புலிகள் இல்லாத ஈழதமிழரை புலி என்று கூறி சிறையிலடிக்கிறாயே துரோகி.ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்? 4இலட்சம் தமிழர் வன்னியில் இருந்தபோது இராயபக்ச நாராயணன் சிவசங்கர் மேனன் பிரனாப் முகர்ச்சி அவர்களுடன் சேர்ந்து வெறு 77பேர்தான் வன்னியில் உள்ளனர் என்று நீயும் கூறி மிகுதி தமிழருக்கு உணவும் அனுப்பாமல் மிகுதி தமிழரை
By பண்டார வன்னியன்
7/3/2010 3:45:00 AM
7/3/2010 3:45:00 AM
கொல்ல நினைத்தாயே துரோகி! .த.வி.பு.மக்களை இரானுவ கேடயம்! துரோகி இதை நீயும் தானே கூறினாய்? .த.வி.புகளால் எனது உயிருக்கு ஆபத்து என்று நீ விட்ட அறிக்கையை மறந்தாயா துரோகி! தமிழ்நாட்டின் சட்டசபையின் அனைத்துகட்சி தீர்மானத்தை குழிதோண்டிபுதைத்தவன் நீ தான் துரோகி. 26.06.09 அன்று அ.தி.மு.கா.ஜெயக்குமாரால் ஈழதமிழர் படுகொலையை விசாரிக்க சர்வதேச நீதி விசாரணை தேவை என்று சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தை தி மு கா ஆளுடையப்பனனை கொண்டு நிராகரித்து மகிந்த இராயபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தாயே யார் துரோகி நீ துரோகி 03.05.09 அன்று மிக கடுமையாக ஈழ தமிழன் கொல்லப்பட்டு காயங்களுடன் மருந்து கொடுத்துதவி செய்யுங்கள் என்று கத்டிய குரல் உலக நாடுகளுக்கு கேட்டது உடனடியாக அப்பலோ மருத்துவமனையில் போய் ஓய்வெடுத்து நாடகமாடினா(நா)யே துரோகி. இந்தியாவின் வெளியுறவு கொள்கை தான் என்னுடைய கொள்கை என்று
By பண்டார வன்னியன்
7/3/2010 3:44:00 AM
7/3/2010 3:44:00 AM
பகிரங்கமாக அறிக்கை விட்டாயே துரோகி. பிரித்தானிய வெ.து. ஓடிவந்து உன்னிடம் கேட்டதே. ஒரோ ஒரு அறிக்கை விடுங்கள் நாங்கள் ஈழ தமிழரை காப்பாற்றுகிறோம் என்று விட மறுத்தாயே துரோகி. மகளை கொண்டு தமிழனின் பிணமாலை சுமந்தவனுக்கு பொன்னாடை போத்தி அழகு பாத்தாயே துரோகி .தமிழனுக்கு ஜெயலலிதா செய்த துரோகங்கள் 1வீதம் நீ தமிழனுக்கு செய்த துரோகங்கள் 99வீதங்கள் நீ ஆயிரம் செம்மொழி மகாநாடு நடத்தலாம் நீதமிழனுக்கு செய்த செய்கின்ற துரோகங்கள் மறைந்து விவோ மறைக்கப்படவே முடியாது துரோகி துரோகி துரோகி கருணாநிதி துரோகி வரலாறு தமிழனால் அழியவில்லை தமிழன் என்று கூறி வந்தேறிகளால் அழிக்கப்பட்டுள்ளது. நீ தமிழனுக்கு செய்த துரோகங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள் அதற்கான காலங்கள் கடந்துவிடவில்லை அதை விடுத்து மோலும் மோலும் ஆரியரும் திராவிடரும் சிங்களவரும் தமிழனை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் 12 கோடி தமிழரால் பதிலடிதரமுடியும் திருந்துங்கள் எதிரி துரோக கூட்டங்களே திருந்துங்கள்
By பண்டார வன்னியன்
7/3/2010 3:43:00 AM
7/3/2010 3:43:00 AM
Mr. RAJA mentioned rightly,, I am happy Tamil people now many Tamils know JJ and MK are ANTI TAMILA and corrupt to core. DMK and ADMK NEVER liked Great Prabhakaran to run a corrrption FREE , real secular, strong and peacefull country.If it happens TN people will start thinking then it will affect their future,, so with Sonia they killed freedom fighters, innocents and destryed the Eelam. Now when I see their condition and SL army further crushing them, really tears comes in my eyes,, moral anger raise,, Ohh God punish these traitors,, plssssss One request to all support SEEMAN and read naamtamilar.org
By kumar
7/3/2010 3:38:00 AM
7/3/2010 3:38:00 AM
விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமலும், முகாங்களில் வாழும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மீள் குடியேற்றாமலும் இழுத்தடிப்பு உபாயத்தை கையாள்கின்றது. மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ முகாங்களை அதிகரித்தும் பலப்படுத்தியும் வருகின்றது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது. குண்டு வீச்சு நடத்தப்பட்ட இடத்திற்கு அண்மித்தாக போராளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் புனர்வாழ்வு முகாம்கள் இயங்குகின்றன. அவற்றை இலக்கு வைத்துக் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. போர்க் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாகக் கூறும் அரசிற்கு இனப் பிரச்சனைக்குரிய தீர்வை முன்வைக்குமாறு சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வரும்வேளையில் இன்னும் புலிகள் தலைமறைவாகச் சிறு குழுக்களாக காடுகளுக்குள் இயங்கிக் கொண்டு இருக்கின்றர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முற்படுகின்றார்கள்.
By கரிகால்சோழன்
7/3/2010 2:29:00 AM
7/3/2010 2:29:00 AM
Ah stupid you. Let me mention the word you once mentioned "Saljappu" (what it means?). Do not show Saljappu here. Everbody knows jj is anti-Thamizh and anti-National, but you are worse than a Traitor. Everyone expected that you were going to stop the war, save innocent lives and push back the invaders to their land. But because of your greediness for Power and safegaurd your family interests, you pawned our nation's interest at the feet of stupid sonia and hindikarans. No true Thamizh will ever vote for you or for your family members. You better get out of Thamizh Nation. Do not use Ezham to settle scores with your arch rival. Both jj and you are crimnals in God's court and you guys sure go to hell.
By Raja
7/3/2010 1:42:00 AM
7/3/2010 1:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *