First Published : 29 Jun 2010 12:00:00 AM IST
Last Updated : 29 Jun 2010 03:21:04 AM IST
டொரன்டோ, ஜூன் 28: இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளை கனடா ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். ÷ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க டொரன்டோ வந்துள்ள பிரதமர், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் பேச்சு நடத்தினார். இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது:÷சீக்கிய சமுதாயத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகள் கனடாவிலிருந்து செயல்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்தகைய சக்திகளை கனடா அரசு ஒருபோதும் ஊக்குவிக்காது.÷கனடாவில் உள்ள சீக்கியர்கள் மிகவும் வளமாக வாழ்கின்றனர். கனடாவின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அவர்களது வாழ்க்கை முறை மாறிவிட்டது. இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர் அமைதியை விரும்புபவர்கள். கனடாவின் மிகச் சிறந்த குடிமக்களாக வாழ்கின்றனர்.÷இவர்களில் ஒரு சிறு பிரிவினர் பிரிவினை சக்தியாக உருவெடுத்துள்ளனர். இது சீக்கிய சமுதாயத்துக்கு உடன்பாடானதல்ல. இந்தியாவுக்கெதிரான இத்தகைய சக்திகளின் செயல்பாடு ஒருபோதும் எடுபடாது. ஏனெனில் இந்தியாவுடன் கனடாவுக்கு மிக நெருங்கிய நட்புறவு உள்ளது என்றார் மன்மோகன்.÷இத்தகைய பிரிவினை சக்திகள்தான் தங்கள் மீதான கருப்புப் பட்டியல் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் இத்தகைய சீக்கிய பிரிவினைவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.÷உலகிலேயே மிகவும் கோரமான விமான விபத்து சீக்கிய பிரிவினை சக்திகளால் 1985-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானத்தில் காலிஸ்தான் அமைப்பு சீக்கிய தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 329 பேரும் உயிரிழந்தனர். சமீபத்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்த 25-ம் ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது.÷சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங், மேலும் குறிப்பிடுகையில், மதத்தின் பெயரால் இத்தகைய பிரிவினை சக்திகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இத்தகைய சக்திகள் வேறு நாடுகளில் செயல்படுவதையும் ஏற்க முடியாது. உலகில் பன்முக கலாசார பின்னணியில் ஒருங்கே வாழும் சூழலில் இதுபோன்ற பிரிவினை சக்திகளுக்கு இடமில்லை. ÷பிரிவினை சக்திகளுக்கு கனடா மண்ணில் இடமளித்துவிடக்கூடாது என தெரிவித்ததற்கு, இது போன்ற பிரிவினை சக்திகளை ஒடுக்குவதற்கு வலுவான சட்டம் உள்ளதாக ஹார்ப்பர் தெரிவித்ததாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
கருத்துக்கள்
கனடா அனுமதிக்காது எனக் கனடா நாட்டுத் தலைவர்தானே அறிவிக்க வேண்டும்? மொழிபெயர்ப்பில் தவறா? அல்லது தவறாகத்தான் தலைமையமைச்சர் பேசினாரா? கனடா அனுமதிக்கக் கூடாது என்றோ கனடா அனுமதிக்காது என எதிர்பார்ப்பதாகவோ கனடா அனுமதிக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவோ கூறுவதுதானே சரியாக இருக்கும். இவ்வாறு கூறியதுதான் தவறாக வந்துள்ளதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2010 5:27:00 AM
6/29/2010 5:27:00 AM
1.கர்நாடகா லோகயுக்தா பதவியிலிருந்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தீடீர் ராஜினாமா செய்துள்ளார்.பெருகிவரும் ஊழல்களுக்கெதிராக பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்சமான கொள்கையை காரணம் காட்டி, தன் பதவி ஆயுள் இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் நிலையில், ஹெக்டே ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் மாற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹெக்டே தன் ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், இவ்வேண்டுகோளை ஹெக்டே நிராகரித்து விட்டதாக தெரிகிறது.கடந்த 2006ம் ஆண்டு ஹெக்டே லோகயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டார். சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு பி.ஜே.பி. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்களை நிரூபித்தும், ஆளும் பி.ஜே.பி. அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
By easta
6/29/2010 12:25:00 AM
6/29/2010 12:25:00 AM
2. ஊழல்கள், பொய் வழக்குகள், பாலியல் பல அமைச்சர்களின் அலுவலகத்தை ரெய்டுகள் செய்துள்ள ஹெக்டே, பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சம்பங்கிவிற்கு எதிராக வழக்கையும் தொடர்ந்துள்ளார். ஆனால் ஹெக்டேவின் அனுமதி இல்லாமலேயே இவர்கள் அனைவரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பதவிகளும் , பரிசுகளும் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் விரக்தியடைந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே லோகயுக்தா பதிவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். குற்றச்சாட்டுக்கள், விவசாயிகளை கொல்லுதல், மதக்கலவரத்தை தூண்டுதல், மதக்கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமை, லோகயுக்தா பதவிகளை பறித்தல் என நீண்ட ஒருதலைபட்ச பட்டியல் நிறைந்த கர்நாடக அரசை மத்திய அரசு உடனே தூக்கி எறியவேண்டும் என்றும் பி.எஃப்.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.
By easta
6/29/2010 12:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
6/29/2010 12:24:00 AM