ஞாயிறு, 20 ஜூன், 2010

இலங்கைத் தமிழர் பிரச்னையில் உறுதியான நிலைப்பாடு: தங்கபாலு

First Published : 20 Jun 2010 02:12:24 AM IST


சென்னை, ஜூன் 19: இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய-மாநில அரசுகள் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறினார்.   சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கேக் வெட்டினார். தொடர்ந்து 400 பேருக்கு இலவச வேஷ்டி-சேலைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அகில இந்திய கா்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  ராகுல் காந்தி பதவி ஆசை இல்லாதவர். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வழியில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் உழைத்து வருகிறார். அவருக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய-மாநில அரசுகள் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசுதான் செய்து வருகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் எடுக்கும் முயற்சிதான் உறுதியானதாகும். ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தவறாக கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும் இவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் செய்துவிட முடியாது. சீனக் கைதிகள் இலங்கையில் குடியமர்த்தப்படுவதாக ஜெயலலிதா கூறுகிறார். இதனால் இந்தியாவுக்கோ, இலங்கைத் தமிழர்களுக்கோ எந்தப் பிரச்னையும் இல்லாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என்றார் தங்கபாலு. இந்த விழாவில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் கோபிநாத், விஷ்ணு பிரசாத், யசோதா, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆர். தாமோதரன், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஹசீனா சம்பத் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்


உண்மைதான்.இலங்கைத் தமிழர பற்றியும் ஈழத் தமிழர் பற்றியும் உறுதியான நிலைப்பாடு காங்.கிற்கு உள்ளது. அந் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தமிழர்களைக் கொன்றொழித்து இடுகாட்டு அமைதியை உருவாக்க எண்ணுகிறது; தமிழ் நிலத்தைச் சிங்கள நிலமாக மாற்றும் சிங்கள அரசிற்கு வலிந்து உதவுகிறது; கொடுங்குற்றவாளியாக இருந்து கொண்டே பாதிக்கபட்டவர்கள் நலனைக் காப்பாற்றுவதாகப் பொய்யுரை கூறுகிறது;கூட்டுக் கொலையாளிக்கு வேண்டிய நிதியுதவிகளும் பரிசுகளும் அள்ளித் தருகி்ன்றது. எனவே,இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கான விலையைக் காலம் காங்கிரசிற்கு அளிக்கும் எனப்து மட்டும் உறுதி!உறுதி!உறுதி! இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/20/2010 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக