செவ்வாய், 22 ஜூன், 2010

Topic: FeTNA: ஆடுவமே பள்ளுப் பாடுவமே பழமைபேசி <pazamaipesi@gmail.com> Jun 21 12:12AM -0400 ^

FeTNA: ஆடுவமே பள்ளுப்
பாடுவமே<http://maniyinpakkam.blogspot.com/2010/06/fetna_2862.html>
*ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!
*
கண்கவர் கனடியத் தேசமுதல் - தென்கோடிப்
பெருதேச மட்டும் தமிழர் கோலங் கொண்டே
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் - தமிழ்
மக்களென்றே குதித்தாடுவமே!
கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் - நல்ல
கதியினைக் காட்டினர் தமிழர் என்றே நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

வானிடை மிதந்திடும் தென்றலிலே - மணி
மாடங்கள் கூடங்கள் மீதினிலே,
தேனிடை ஊறிய செம்பவழ - இதழ்ச்
சேயிழை யாரொடும் ஆடுவமே! நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

கவிதைகள், காவியம், உயர்கலைகள் - உளம்
கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம்
குவிகின்ற பொன்பொருள் வெள்ளியெலாம் - இங்குக்
குறையிலவாம் என்றாடுவமே!பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

நாஞ்சில் ஐயனொடு பெருங்கூட்டம் இலக்கியம் செப்பிடுவர்
கவின்மிகு கவிகள் கவி பாடிடுவர், தித்திக்கும்
தீந்தமிழ்ப் பேச்சாளர் பட்டிமண்டபம் நடத்திடுவர்; நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கனெக்டிகெட்
வாட்டர்பெரியில் கூடுவமே!
*ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கனெக்டிகெட்
**வாட்டர்பெரியில் * <http://fetna.org/>*கூடுவமே! *


[image: video]

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக