வெள்ளி, 5 மார்ச், 2010

நித்யானந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: கர்நாடக அமைச்சர்பெங்களூர், மார்ச் 4: நித்யானந்தர் சுவாமி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா தெரிவித்தார். வியாழக்கிழமை காலை சட்டப்பேரவை கூடியதும் நித்யானந்தர் பிரச்னையை கிளப்பி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசினார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது சொத்துக்களை முடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்குப் பதில் அளித்து அமைச்சர் ஆச்சார்யா கூறியதாவது:சாமியார் நித்யானந்தர் தமிழ்நாடு திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். அவரது தலைமை ஆசிரமம் அங்கேயே உள்ளது. அவரது உண்மையான பெயர் ராஜசேகர். சாமியார் ஆனதும் நித்யானந்தர் என பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். அவரது ஆசிரமம் கர்நாடகாவில் பிடுதியிலும் உள்ளது. அந்த ஆசிரமம் உள்ள இடம் அரசு நிலம். இந்த ஆஸ்ரமத்துக்கு நமது நாட்டில் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். வெளிநாடுகளிலும் அவருக்கு ஆஸ்ரமம் உள்ளது. இவரைப் பற்றி 2-ம் தேதி இரவு தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவரது ஆசிரமத்தின் மீதுதாக்குதல் நடத்தினர். ஒரு கட்டடத்துக்கு தீ வைத்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் போலீஸôர் அங்கு விரைந்து சென்று சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் புதன்கிழமை மாலையில் அந்த ஆசிரமத்தில் இருந்த இரு குடில்கள் தீப்பிடித்து எரிந்துவிட்டன. மேலும் நித்யானந்தர் மான் தோலைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியானதை அடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த ஆசிரமத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். ஆனால் மான்தோலோ அல்லது வேறு விலங்கள் தோலோ கிடைக்கவில்லை. அந்த ஆசிரமத்தில் இருந்து 26 கிலோ சந்தன மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.அதுபற்றி விசாரித்தபோது ஆசிரமத்தில் இருந்த சந்தன மரத்தை சில நாள்களுக்கு முன் திருடர்கள் வெட்டி எடுத்துச் சென்று கிளைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் அதுபற்றி போலீஸிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. நித்யானந்தர் குறித்து தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். அவர் கர்நாடகம் வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரது ஆசிரமத்தின் சொத்துக்கள் தொடர்பாக தகராறு இருந்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கும்படி ராம்நகர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சியர் அறிக்கை கிடைத்ததும் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் ஆசிரமம் அரசு நிலத்தில் உள்ளதால் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மேலும் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட விடியோ காட்சிகள் பிடுதி ஆசிரமத்தில் எடுக்கப்பட்டதல்ல. அவை தமிழகத்தில் உள்ள ஆசிரமத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கருத்துக்கள்

நித்யானந்தன் எங்கிருந்தாலும் கருநாடக அரசு நடவடிக்கை எடுக்கலாம். எனவே கருநாடக அரசு உடனே அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/5/2010 3:34:00 AM

மை, 02 மார்ச் 2010, 11:17.28 AM GMT +05:30 ] டெல்லியில் 5 இடங்களில் விபசார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்த மாணவிகள், விமான பணிப் பெண்கள் போன்ற பலர் மீட்கப்பட்டுள்ளனர். டெல்லி கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39). சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடி இவர் சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம். மிக குறுகிய காலத்தில் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல் வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் புகழ் பெற்ற சாமியாராக வலம் வந்தார். இந்த நிலையில் சாமியார் சிவ்முரத் திவேதி உண்மையான சாமியார் அல்ல போலி சாமியாரான அவர் மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவேதி யையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர்.

By AlsoTamil
3/5/2010 1:59:00 AM

போர்குற்றங்களின் சாட்சியங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை இந்திய உளவுத்துறை! தமிழ்நாட்டு ஊடகங்கள்! இலங்கை போர் குற்றங்களை அறிந்தவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறி அவர்களை அழிக்க ஒரு குழு தமிழகம் வந்துள்ளது. இலங்கை உள்நாட்டு போருக்கு பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்த ஈழத் தமிழர் சிலர், அன்மையில் கடத்தப்பட்டது அவர்கள் நேரில் கண்ட போர் குற்றங்களை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று அடக்கி வைப்பதற்காகத்தான் என்று சென்னை ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் கொழும்பு வதை முகாமில் இருந்து ஒரு சிறப்புக்குழு தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சில குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட கூறியிருந்த இக்குழுவில் முன்னாளில் தமிழ் ஈழ நிர்வாகத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் காவல்துறையினர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற தமிழர் சிலரைப் பற்றியும், தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுடன் தொடர்பு கொண்டும் மற்றும் இலங்கை ராணுவத்தினரின் போர்க்குற்றங்களை நேரில் கண்டறிந்த மருத்துவப் பணியாளர்களையும் சந்தித்து தகவல் பெறுவதற்காகவே என்று கூறப்படுகிறது.

By AlsoTamil
3/5/2010 1:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக