ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

செம்மொழி மாநாடு இன்னும் 116 நாள்கள்: கண்காட்சியில் அரிய 1,000 பொருள்கள்



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியில் தமிழர் வரலாறு தொடர்பான ஓவியங்கள், கல்வெட்டுக்கள் என 1,000 அரிய பொருள்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், விருந்தினர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஒருங்கே குழும உள்ளனர்.இவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு }நாகரிகம், தமிழ் இலக்கியம், தொல்லியல் என 6 தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக 30}க்கும் மேற்பட்ட அரங்குகள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இக்கண்காட்சியில் தமிழர்கள் நாகரிகத்தின் ஆதாரமாக விளங்கும் தொல்லியல் சான்றுகளான கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள், சிற்பங்கள், ஓலைச்சுவடிகள், பழங்கால நாணயங்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்படுகின்றன. கற்காலம் முதல் அண்மைக்காலம் வரையிலானவை இதில் அடங்கும்.சிந்து சமவெளி நாகரிகம்...: மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தலைமைக் குழுவில் துணைத் தலைவராக உள்ள தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், சிந்து சமவெளி நாகரிகத்துடன் தமிழர் நாகரிகத்தின் தொடர்பு குறித்து தனி அரங்கு வைக்க உள்ளார். இதுபோல பல தலைப்புகளில் அரங்குகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.தமிழறிஞர்கள் படம்...: கண்காட்சியில், தமிழுக்காக உழைத்த அறிஞர்கள் பரிதிமாற்கலைஞர், ரா.சேதுப்பிள்ளை, உடுமலை நாராயணகவி, மு.வரதராசன், கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட ஏராளமானவர்களின் அரிய புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன.மேலும் தமிழ் மொழி குறித்த ஆதாரமாக விளங்கும் அரிய பல புத்தகங்களும் இடம்பெறுகின்றன.இக்கண்காட்சி பற்றி தொல்லியல்துறை ஆணையரும், கண்காட்சி ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ்.ஸ்ரீதர் கூறியது:தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் என 6 தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதுதொடர்பான ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் என 1,000 பொருள்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் உண்மையானவையும், மாதிரிகளும் அடங்கும். கண்காட்சியில் வைக்கப்படுவதற்கான பொருள் சேகரிப்பு தற்போது நடந்து வருகிறது என்றார்.
கருத்துக்கள்

இக்கண்காட்சியை நிலையானதாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் தொடர்ச்சியான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கும். மாநாட்டிற்கு வர இயலாதவர்களும் வர விரும்பாதவர்களும் பின்னர் பார்வையிட வாய்ப்பாக இருக்கும். மேலும் இக்கண்காட்சியில் தமிழினம் உலகெங்கும் சந்திக்கும் அவலங்கள் தொடர்பிலான படங்கள், உலகின் மூத்த முதல இனமானத் தமிழ் இனம் சந்திக்கும் படுகொலைகள் தொடர்பான செய்திகள், தமிழர்களின் தாயகம் தமிழ் ஈழம் என்பதற்கான ஆவணங்கள் முதலானவற்றையும் வைக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/28/2010 3:51:00 AM

What is the purpose of this conference. Karunanithy has ruled Tamil Nadu long time and during this time the tamil has been gradually englishized. It so unbearable to listen any Tamil Nadu Tamils speakising Englishized Tamil. Karunanithy is master actor and without address the real problem is staging an international drama. UNESCO has declared that Tamil is a dying language. Real Tamils should do something rather than attending this sherade. Pure Tamils is spoken in Eelam and instead of supporting the Karunanirth aided and abetted the killing of this. Made deals with devils who burnt more 100000s valuable and unreplaceable books and manuscipts in Tamil. He is only accelerating the death tamil language

By Ram Chetty
2/28/2010 1:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக