வெள்ளி, 1 ஜனவரி, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடாக இருக்காது: முதல்வர்



சென்னை, டிச. 31: ""கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடாக இருக்காது'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.செம்மொழி மாநாடு குறித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:மாநாடு நடந்து முடிந்தது என்று இல்லாமல் வரலாற்றில் இந்த மாநாடு இடம் பெறக் கூடிய அளவுக்கு ஏதாவது செய்யப்படுமா?இது கூடிக் கலையும் மாநாடாக அல்ல; மாநாட்டு வெற்றிக்குப் பிறகு, இந்திய பேரரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் அமைய வேண்டும் என்பதைத் தொடர் நடவடிக்கைகள் மூலம் வலியுறுத்துவோம்.1968-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது, சென்னையில் தமிழ் அறிஞர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டன. இந்த மாநாட்டிலும் அப்படிப்பட்ட நோக்கம் இருக்கிறதா?அந்தக் கருத்து இன்றைய கூட்டத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது. அத்தகைய சிலைகள் யார் யாருக்கு குறிப்பாக எந்தத் தமிழ் அறிஞர்களுக்கு கோவையிலே வைக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்திருக்கிறோம்.தமிழக எதிர்க் கட்சிகளை மாநாட்டுக்கு அழைப்பீர்களா?எல்லோரையும் அழைத்தோம். நாங்கள் வருவதற்கில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் நாங்கள் எழுதிய கடிதத்துக்கு பதில் அனுப்பி விட்டார்கள்.கடந்த காலங்களில் நடைபெற்ற மாநாடுகளை விட, இந்த மாநாடு எந்த விதத்தில் உயர்ந்ததாக இருக்கும்?எந்த விதத்தில் உயர்ந்ததாக இருக்கும் எனச் சொல்லி, மற்ற மாநாடுகளை பின்னுக்குத் தள்ள விரும்பவில்லை. அண்ணா முதல்வராக இருந்த போது நடத்திய மாநாடு உலகப் புகழ் பெற்ற மாநாடு. அவரது வழியில் அந்த மாநாட்டுக்கு ஒப்பான மாநாட்டினை கோவையில் நடத்துவோம்.உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்த போது, அது அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இப்போது, கோவை மாவட்ட வளர்ச்சிக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?கோவை மாநகரில் மட்டுமல்ல, கோவையைச் சுற்றியுள்ள இடங்களிலும், கோவை மாவட்டத்திலும் பல சிறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.மாநாட்டுக்கு ஆகும் செலவு பற்றி?அரசின் சார்பில் இந்த மாநாட்டுக்கு தரப்படுகின்ற நிதி ஒழுங்காகச் செலவு செய்யப்பட்டு, அதற்கான கணக்கு முறையாகக் காட்டப்படும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

இந்தியப் பேரரசின் மொழியாகத் தமிழ் அமைய எடுக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். அதே நேரம் தமிழ் மொழி தமிழ் நாட்டில் உண்மையான ஆட்சி மொழியாகக்,கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, தனியார் அலுலகங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்களிலும் பிற மாநில அரசு அலுவலகங்களிலும் தமிழ் நாட்டில் தமிழே அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வணிக மொழியாக அமைய நடவடிக்கை எடுகக வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/1/2010 3:56:00 AM

tamil ina throgi no 1... cunning old fox... selfish bastard

By babu
1/1/2010 3:06:00 AM

ஈழத் தமிழர்கள்தமிழக மீனவர்களின் அழிவை தடுக்காத இவருக்கு தமிழ் பேசக் கூட உரிமையில்லை. உலகத் தமிழர்கள் யாரும் இந்த மாநாட்டை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. உன் மீது படிந்த "துரோகி" கறை எத்தனை நூறு வருடங்கள் ஆனாலும் கழுவ முடியாது தன்னைப் பற்றி தமிழறிஞர்களை துதிபாட வைக்கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கருணாநிதி நடத்துகிறார் மக்களை எப்படி கொடுமை படுத்துவது எப்படி கொல்வது , அதை எப்படி மூடி மறைப்பது என்பது பற்றி ஆராச்சி நடத்தவே இந்த மாநாடு

By usanthan
1/1/2010 1:49:00 AM

மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் இ‍ந்த தமிழின துரோகி கருணாநிதியின், சுய விளம்பரத்திற்க்காக நடத்தப்பட போகும் இம்மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். மக்களை எப்படி கொடுமை படுத்துவது எப்படி கொல்வது , அதை எப்படி மூடி மறைப்பது என்பது பற்றி ஆராச்சி நடத்தவே இந்த மாநாடு

By usanthan
1/1/2010 1:45:00 AM

ஆம்மாம் கூடிக் கலையும் மாநாடாக இருக்காது: கனிமொழிக்கு இன்னொரு பணக்கார கள்ள புருசனுக்கு கூட்டி குடுக்கும் மகாநாடக இருக்கும். எவனாவது வெளி நாட்டு இழிச்சவயேன் மாட்டுவான் என்ற எதிர் பார்ப்போடு இந்த மாநாடு

By bavani
1/1/2010 12:35:00 AM

www.uploadhouse.com/viewfile.php?id=5007380 www.uploadhouse.com/viewfile.php?id=5007379 www.uploadhouse.com/viewfile.php?id=5007381 தயவு செய்து இந்த படங்களை மற்றவர்களுக்கும் புத்தாண்டு செய்தியாக அனுப்புங்கள்

By bavani
1/1/2010 12:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக