ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

பிரணாபின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற கொடில்யர்



புதுதில்லி, பிப்.26: பாரத நாட்டின் பொருளாதாரவியல் முன்னோடியாகவும் பொருளாதாரவியல் சட்ட நடைமுறைகள் இடம்பெறும் அர்த்த சாஸ்திர நூலின் ஆசிரியருமான கொடில்யரை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை தனது உரையின்போது மேற்கோள் காட்டிப் பேசினார்.புதிய வரி விதிப்புகளை திட்டமிடும் முன் அர்த்த சாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ள வரி நிர்வாக கொள்கைகளை வழிகாட்டுதலாகக் கொண்டு முடிவு செய்தேன் என்று தெரிவித்தார் பிரணாப்.இதற்கு முன்னரும் பிரணாப் 2009 ஜூலை மற்றும் 1984-85ல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிப்பேசிய போதும் அவரை மேற்கோளிட்டுப் பேசியுள்ளார். இந்திய பட்ஜெட் வரலாற்றில் இதுவரை 4 தடவை கெüடில்யரின் பெயர் மேற்கோள் காட்டி பேசப்பட்டுள்ளது. 1999-2000த்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் கெüடியல்யரை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். கிமு 4ம் நூற்றாண்டில் மாமன்னன் அலெக்சாண்டரின் சமகாலத்தவரான மன்னர் சந்திரகுப்த மெüரியரின் அரசவைத் தலைவராக இருந்தவர் கெüடில்யர்.
கருத்துக்கள்

தமிழகததைச் சேர்நதவர்தானே நிதித்துறையில் இணையமைச்சராக உள்ளார். அவர் திருக்குறளை இடம் பெறச் செய்திருக்கலாமே! 2.)விண்டர்னிட்சன், யாலி(ஜாலி),கீத் முதலான கல்வியாளர்கள் சந்திரகுப்தர் காலத்தில் சாணக்கியர் என்னும் ஒருவர் இருந்ததில்லை என்றும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய யாக்ஞ்ய வல்கிய சிமிருதியைப் பின்பற்றிக் கௌடலீயம் எழுதப்பட்டுள்ளதால் அதற்கும் பிற்பட்டதே இந்நூல் என்றும் எழுதியுள்ளனர். திருக்குறளின் தாக்கத்திற்கும் கௌடலீயம் உட்பட்டுள்ளது என இந்திய அறிஞர்கள் எழுதியுள்ளனர். மனுநூல் போன்று வருண அடிப்படையிலும் பெண்களை இழிவுபடுத்தியும் எழுதப்பட்டதே இந்நூல் எனப் பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர். பேராசிரியர் ப.மருதநாயகம் தம்முடைய ஒப்பில் வள்ளுவம் என்னும் நூலில் 10 ஆம் இயலில் திருக்குறளையும் கௌடலீயத்தையும் ஒப்பிட்டு ஆய்வுரை வழங்கியள்ளதைக் காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/28/2010 4:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக